azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 15 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 15 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Today everyone is troubled by worry and anxiety. There is not a moment when you are free from worries. “To be born is a worry, to live on earth is a worry; world is a cause of worry and death too is a reason of worry; entire childhood is a worry and so is old age; life is a worry, failure is a worry; all actions and difficulties cause worry; even happiness too is a mysterious worry”, says a Telugu poem! Body attachment is the primary cause of all anxieties. It is impossible to experience happiness without undergoing difficulties and worries. Pleasure is an interval between two pains. You undertake various activities, of which some are good and some bad. Your thought (sankalpa) is the root cause of this duality. Good thoughts lead to good actions and vice versa. You are the embodiment of resolutions and negations (sankalpasandvikalpas). True spiritual practice lies in controlling your thoughts and aberrations. - Divine Discourse, Sep 10, 2002.
இன்று ஒவ்வொருவரும், கவலை மற்றும் கலக்கத்தினால் துன்பப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் கவலைகள் இன்றி ஒரு கணம் கூட இருப்பதில்லை.’’ பிறப்பதே ஒரு கவலை,பூமியில் வசிப்பதே ஒரு கவலை , உலகமே கவலைக்குக் காரணம், இறப்பது கூட கவலைக்கு ஒரு காரணம்; குழந்தைப் பருவம் முழுவதுமே ஒரு கவலை, முதுமையும் அப்படியே; வாழ்க்கையே ஒரு கவலை,தோல்வி ஒரு கவலை; அனைத்து செயல்களும், கஷ்டங்களும் கவலையை உண்டாக்குகின்றன; சந்தோஷம் கூட ஒரு வித மர்மமான கவலையே’’ என்கிறது ஒரு தெலுங்குப் பாடல் ! உடல் பற்றே எல்லாக் கலக்கங்களுக்கும் மூல காரணம். கஷ்டங்களுக்கும் கவலைகளுக்கும் உட்படாமல், சந்தோஷத்தை அனுபவிப்பது சாத்தியமில்லை. இன்பம் என்பது இரு துன்பங்களுக்கு நடுவே உள்ள ஒரு இடைவெளி. நீங்கள் பல காரியங்களை, சில நல்லவற்றையும், சில தீயவற்றையும், செய்கிறீர்கள். உங்களது சிந்தனைகளே ( ஸங்கல்பமே),இந்த இருமைக்குக் காரணம்.நல்ல எண்ணங்கள், நல்ல செயல்களுக்கும், நல்ல செயல்கள்,நல்ல எண்ணங்களுக்கும் இட்டுச் செல்கின்றன. நீங்கள் ஸங்கல்ப, விகல்பங்களின் உருவமே. உண்மையான ஆன்மீக சாதனை , உங்களது சிந்தனைகளையும், வக்ரங்களையும் கட்டுப் படுத்துவதில் தான் இருக்கிறது.