azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 04 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 04 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Of all the branches of education, spiritual education is the true education. In comparison, spiritual education is the ocean while the other branches of education are like the rivers. When rivers go and merge in the ocean, they acquire the depth and glory of the unfathomable ocean. Similarly when all forms of education blend and merge with spiritual education, they acquire the form and grandeur of the ocean of wisdom. When your education is combined with penance (tapas), then the blossoming of your heart and the ennobling of your ideas will occur naturally. Tapas does not mean that you should give up everything and go to the forest and stand there with your head on the ground. Tapas is one, through which, you can harmonise your thought, word and deed with each other. When such a sacred type of education is given along with proper culture, great and noble ideas will blossom from within you. (Summer Roses on Blue Mountains 1976, Ch 11)
கல்வித் துறைகள் அனைத்திலும், ஆன்மீகக் கல்வியே உண்மையான கல்வியாகும். ஒப்பிட்டுப் பார்த்தால், ஆன்மீகக் கல்வி கடலைப் போன்றது; மற்றத் துறைகள் நதிகளைப் போன்றவை.நதிகள் பாய்ந்து ஓடி, கடலில் கலக்கும் போது, அவைகளும் , அளவிடமுடியாத கடலின் ஆழம் மற்றும் மேன்மையைப் பெற்று விடுகின்றன.அதைப் போலவே, எல்லா விதமான கல்வித் துறைகளும், கலந்து ,ஆன்மீகக் கல்வியுடன் ஒன்றிணையும் போது, அவைகளும் ஞானக் கடலின் ரூபம் மற்றும் மகத்துவத்தைப் பெற்று விடுகின்றன. உங்களது கல்வி, தவத்துடன் இணைந்திருந்தால், உங்கள் இதயம் மலர்வதும், உங்களது கருத்துக்கள் சீரடைவதும், இயற்கையாகவே ஏற்பட்டு விடும். தவம் என்றால், நீங்கள் அனைத்தையும் துறந்து விட்டு, காட்டிற்குச் சென்று , தலைகீழாக நிற்க வேண்டும் என்று பொருளல்ல. எந்த ஒன்றின் மூலம், உங்களது சிந்தனை, சொல், மற்றும் செயல்கள் ஒன்றுக்கொன்று இசைவாக இருக்குமாறு ஆக்கப் படுகிறதோ, அதுவே தவமாகும். இப்படிப் பட்ட புனிதமான ஒரு கல்வி, எப்போது முறையான கலாசாரத்துடன் அளிக்கப் படுகிறதோ, அப்போது தலை சிறந்த மற்றும் சீரிய சிந்தனைகள் உங்களுள்ளிருந்து மலரும்.