azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 27 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 27 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Prema (Love) is like a most precious diamond. Love is alien to persons who are selfish, conceited or ostentatious. Where then is this love to be found? This precious diamond can only be got in the kingdom of Love, in the street of Love, in the shop of Love. It can be obtained only through a loving heart. It may be asked, "Is not the whole world permeated with Love? Then why is not Love readily available?" The love with which the world is considered to be filled with is not real love. Love cannot be associated with the body, the senses, the mind and the intellect. Anything associated with these is only attachment (Anuraga). Spiritual (Atmic) life alone is a Love-filled life. Therefore, lead a spiritual life, not a life bound by body, mind, senses and intellect. A life related to the body, the senses, the mind and the intellect can never be free from selfishness, conceit and ostentation. (Divine Discourse, Aug 21, 1992)
ப்ரேமை என்பது விலைமதிக்க முடியாத ஒரு இரத்தினம் போன்றதாகும். சுயநலம், அகந்தை மற்றும் படாடோபமான மனிதர்களுக்கு, ப்ரேமை அந்நியமானதாகும். அப்படி என்றால, இந்த ப்ரேமையை எங்கு காண முடியும்? இந்த விலையுயர்ந்த இரத்தினத்தை, ப்ரேமை சாமராஜ்யத்தில், ப்ரேமை வீதியில், ப்ரேமைக் கடையில் பெறலாம்.இதை ஒரு ப்ரேமை நிறைந்த இதயத்தின் மூலமே பெற முடியும். ‘’ இந்த உலகனைத்தும் ப்ரேமையால் நிரம்பியதே அல்லவா? பின் ஏன் அது எளிதாகக் கிடைப்பதில்லை ? ‘’ என்று கேட்கக் கூடும். இந்த உலகனைத்திலும் நிரம்பியுள்ளதாகக் கருதப்படும் ப்ரேமை, உண்மையான ப்ரேமை அல்ல.ப்ரேமை என்பது உடல்,புலன்கள், மனம் அல்லது புத்தியோடு சம்பந்தப் பட்டதல்ல.இந்த எதோடும் சம்பந்தப் பட்டது எதுவும் பற்றுதலே ( அனுராகா) ஆகும். ஆன்மீக ( ஆத்மா) வாழ்க்கை மட்டுமே, ஒரு ப்ரேமை நிறைந்த வாழ்க்கையாகும்.எனவே, உடல், மனம், புலன்கள் மற்றும் புத்தியால் கட்டுண்டு இல்லாத, ஒரு ஆன்மீக வாழ்க்கையை நடத்துங்கள். உடல், புலன்கள்,மனம் மற்றும் புத்திக்கு சம்பந்தப் பட்ட ஒரு வாழ்க்கை, ஒரு போதும் சுயநலம்,அகந்தை மற்றும் படாடோபம் அற்றதாக இருக்க முடியாது.