azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Do you know why you have been given a human body? Is it to take it to all the corners of the world? No, that is not the purpose. You have been given this body so that you may demonstrate, with its help, the truth of the statement that the body is intended for doing good to other human beings. Divya Atma Swarupas (Embodiments of the Divine Soul)! It is for us to recognise that the compassion that all the living beings deserve from us forms the essence of our being able to get a vision of the Atma. The greatest penance (tapas) is the bringing together of the compassion that is present in all beings. Unlike a cow, horse, elephant or other animals, the sacredness of life that has been given to a human being is at a very high level. (Summer Roses on Blue Mountains, 1976, Ch 10)
ஒரு மனித உடல் உங்களுக்கு ஏன் கொடுக்கப் பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை உலகத்தின் எல்லா மூலைகளிலும் எடுத்துச் செல்வதற்காகவா? இல்லை. அதுவல்ல நோக்கம். இந்த உடல், மற்ற மனிதர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்டுள்ளது என்ற வாக்கியத்தின் உண்மையை, அதன் உதவியுடன், நீங்கள் எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு இந்த உடல் கொடுக்கப் பட்டுள்ளது. தெய்வீக ஆத்ம ஸ்வரூபங்களே! அனைத்து ஜீவராசிகளும், நம்மிடமிருந்து பெறத் தகுதியுள்ள கருணையே, நாம் ஆத்ம சாக்ஷாத்காரம் பெறுவதன் சாரம் என்பதை நாம் உணர வேண்டும். அனைத்து ஜீவராசிகளிலும் உறையும் கருணையை ஒன்றிணைப்பதே மிகச் சிறந்த தவமாகும். ஒரு பசு, குதிரை,யானை அல்லது பிற மிருகங்ளைப் போல அல்லாது, ஒரு மனித வாழ்க்கையின் புனிதத்தன்மை மிக உயர்ந்த நிலையை உடையது.