azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Stick to your faith; do not change your loyalty as soon as something happens or someone whispers something. Do not pull down Sai Baba’s picture from the wall and hang some other picture there at the first disappointment you meet. Leave all to Him; let His Will be carried out — that should be your attitude. Unless you go through the rough and the smooth, how can you be hardened? Welcome the light and the shade, the sun and the rain. Do not think that only those who worship a picture or image with pompous paraphernalia are devotees. Whoever walks straight along the moral path, whoever acts as they speak and speaks as they have seen, whoever melts at another’s woe and exults at another’s joy — they are devotees, perhaps greater devotees. (Divine Discourse, Feb 26, 1961)
உங்களது நம்பிக்கையை விடாது பற்றி இருங்கள்; ஏதோ ஒன்று நடந்து விட்டாலோ அல்லது யாராவது உங்களது காதில் எதையோ ஓதினாலோ, உங்களது விசுவாசத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் சந்திக்கும் முதல் ஏமாற்றத்திலேயே சாய் பாபாவின் படத்தைச் சுவரிலிருந்து எடுத்து வீசி விட்டு, அந்த இடத்தில் வேறு ஏதாவது ஒரு படத்தை மாட்டாதீர்கள். அனைத்தையும் இறைவனிடம் விட்டு விடுங்கள்;அவனது ஸங்கல்பத்தின் படியே நடக்கட்டும்- இதுவே உங்களது மனப்பாங்காக இருக்க வேண்டும். இன்னல் தருபவை, இதமானவை என்ற இரண்டையும் அனுபவிக்கா விட்டால், நீங்கள் எப்படி வலுவானவராக ஆக முடியும்? ஒளி மற்றும் நிழல், வெய்யில் மற்றும் மழை என அனைத்திற்கும் வரவேற்பு அளியுங்கள்.ஒரு படம் அல்லது விக்ரஹத்தை, மிகுந்த படாடோபத்துடன் வழிபடுவர்கள் மட்டுமே பக்தர்கள் என எண்ணாதீர்கள். எவர் ஒருவர் நேர்மையான பாதையில் நேராகச் செல்கிறார்களோ, தங்களது வாக்கின்படி நடக்கிறார்களோ,தாங்கள் கண்டதை மட்டும் கூறுகிறார்களோ, பிறரது துன்பத்தைக் கண்டு மனம் உருகுகிறார்களோ, பிறரது சந்தோஷத்தைக் கண்டு ஆனந்தம் அடைகிறார்களோ – அவர்களே பக்தர்கள்; ஒருவேளை அவர்களே மிகச் சிறந்த பக்தர்களாகவும் இருக்கக் கூடும்.