azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 18 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 18 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

In a spiritual sphere of mental peace and inner joy, the responsibility for success or failure is entirely one’s own. You have no right to shift it on to others. The fire will go out if the fuel is over, so stop feeding it with fuel. Do not add fuel to the fire of the senses. Detach the mind from the temporary and attach it to the eternal. Plant the seedling of devotion, namely the preliminary exercise of remembering the Lord’s name (namasmarana) in the mind. That will grow into a tree with the branches of virtue, service, sacrifice, love, equanimity, fortitude, and courage. You swallow food, but you are not aware how that food is transformed into energy, intelligence, emotion, and health. In the same way, just swallow this food for the spirit, this remembrance of the Lord’s name, and watch how it gets transmuted into virtue and the rest without your being aware of it.(Divine Discourse, Feb 27, 1961.)
மனச்சாந்தி மற்றும் ஆத்மானந்தத்தின் ஆன்மீகத் துறையில்,வெற்றி அல்லது தோல்விக்கான முழுப் பொறுப்பும், ஒருவருக்கு தங்களுடையதே. இதை மற்றவர் மீது சுமத்துவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.எரிபொருள் தீர்ந்து விட்டால், நெருப்பு அணைந்து விடும்; எனவே, அதற்கு எரிபொருளை ஊட்டுவதை நிறுத்துங்கள்.புலன்கள் என்ற நெருப்பிற்கு மேலும் எரியூட்டாதீர்கள். தாற்காலிகமானவற்றிலிருந்து மனதை விலக்கி, நிரந்தமானவற்றின் மீது பற்றுதல் கொள்ளச் செய்யுங்கள். பக்தியின் முதல் கட்ட பயிற்சியான இறை நாமஸ்மரணை எனும் நாற்றை மனதில் நடுங்கள். அதுவே, நல்லொழுக்கம், சேவை, தியாகம், ப்ரேமை, சமச்சீரான மனப்பாங்கு,சகிப்புத் தன்மை மற்றும் தைரியம் என்ற கிளைகளைக் கொண்ட ஒரு மரமாக வளர்ந்தோங்கும்.நீங்கள் உணவை விழுங்குகிறீர்கள்; ஆனால் அந்த உணவு, எவ்வாறு சக்தி, புத்தி,உணர்வு மற்றும் ஆரோக்கியமாக மாறுகிறது என்பதை அறிவதில்லை.அதைப் போலவே, இறை நாமஸ்மரணை என்ற ஆத்மாவிற்கான உணவை விழுங்க மட்டும் செய்யுங்கள்; நீங்கள் அறியாமலேயே அது எவ்வாறு நல்லொழுக்கம் மற்றும் மற்றவைகளாக மாறுகிறது என்பதை கவனியுங்கள்.