azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 10 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 10 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Once the Atma is cognised, you will find that all is really One. This is the goal prescribed by the scriptures of this land. But the children of this sacred land have neglected it and are today struggling in the quagmires and cesspools of faction and fear. When the four bulls that grazed in the jungle were united and watchful of each other's safety (for they felt they were all one) the tiger dared not approach them; but, when discord broke them and created out of the ‘one’, four separate individuals, they were attacked one by one, and devoured by the tiger. That is the fate of those who feel separate. Know that though vyaktis (individuals) may be separate, the shakti (power) is one; that Shakti is the Paramatmatattva (principle of the supreme Atma). This is the message that I bring. This message surely is hitha (beneficial), though it may not be priya (pleasing). A patient must take medicines and follow the restrictions that doctors recommend; they cannot eat and live as they please during illness. The doctor knows best and must be obeyed to regain health. (Divine Discourse, March 16, 1966)
ஒரு முறை ஆத்மாவை உணர்ந்து விட்டால், உண்மையில் அனைத்தும் ஒன்றே என்பதைக் காண்பீர்கள்.இந்தக் குறிக்கோளைத்தான் இந்நாட்டின் புனித நூல்கள் அறிவுறுத்துகின்றன. இந்தப் புனித பூமியின் குழந்தைகள் இதை உதாசீனப்படுத்தி விட்டு, பிரிவினை மற்றும் பயம் என்ற சேற்றுக் குட்டைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.எப்போது காட்டில் மேய்ந்து கொண்டிருந்த நான்கு எருதுகளும் ஒற்றுமையாக இருந்து, ஒவ்வொன்றும், மற்றவற்றின் பாதுகாப்பைக் கவனித்துக் கொண்டிருந்த வரை ( ஏனெனில் அவை நான்கும் தாங்கள் ஒருவரே என்று உணர்வைக் கொண்டிருந்ததால்) புலிக்கு அவைகளை அணுகுவதற்கான தைரியம் இல்லை; ஆனால், அவைகளுக்குள் வேற்றுமை தோன்றி, அவை பிரிந்து, அந்த ‘’ ஒன்றிலிருந்து’’ , நான்கு தனிப்பட்டவர்களாக ஏற்பட்டவுடன், அவை ஒவ்வொன்றாகத் தாக்கப் பட்டு, புலியால் விழுங்கப் பட்டு விடுகின்றன. தனிப்பட்டவர்களாக எண்ணுபவர்களின் கதி இதுதான். மனிதர்கள்( வ்யக்தி) தனித்தனியாக இருந்தாலும், அவர்களின் சக்தி ஒன்றே; அந்த சக்தியே பரமாத்ம தத்துவம். இதுவே நான் உங்களுக்குக் கொண்டு வந்துள்ள சந்தேசமாகும். இந்த சந்தேசம், பிரியமானதாக ( ப்ரிய) இல்லாமல் இருக்கலாம், ஆனால் பலன் தரும் ( ஹித) ஒன்று. ஒரு நோயாளி மருந்துகளை எடுத்துக் கொண்டு ,வைத்தியர்கள் கூறும் கட்டுப்பாடுகளை அனுசரிக்க வேண்டும்;நோய்வாய் பட்டு இருக்கையில் இஷ்டப்படி உண்டு களிக்கக் கூடாது. எது நல்லது என்பதை வைத்தியரே அறிவார்; ஆரோக்கியத்தைத் திரும்பப் பெற அவருக்குக் கீழ் பணிந்தே ஆக வேண்டும்.