azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 05 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 05 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Start with this first lesson. Do not merely boast that you have mastered the Bhagavad Gita (scriptures), read it a hundred times over, and memorised all the slokas and the commentaries written so far. Among all the millions who were taught the Gita, Arjuna alone had the realisation that this Universe is but a partial manifestation of His immeasurable glory (Vishwarupa Darshana)! Why is it that these great scholars had no such experience? Realisation of that reality can come only to the aspirant who deserves it. Arjuna reached the highest stage of surrender when the teaching started and during the process, he had unexcelled concentration. No wonder he was blessed. Unless you have the same degree of surrender, the same yearning and concentration, how can one expect the result that Arjuna attained? The path of surrender (Saranagathi or Prapatti), that the Gita lays down is not easy; it requires dedication and persistence. (Divine Discourse, March 16, 1966)
முதல் பாடத்திலிருந்து ஆரம்பியுங்கள்,ஸ்ரீமத் பகவத் கீதையைக் கரைத்துக் குடித்து, அதை நூறுக்கு மேற்பட்ட தடவை படித்து, அதிலுள்ள அனைத்து ஸ்லோகங்கள் மற்றும் இது வரை அதற்கு எழுதப்பட்ட பாஷ்யங்கள் அனைத்தையும், மனப்பாடம் செய்து விட்டதாக வெறும் தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள். ஸ்ரீமத் பகவத் கீதையைக் கற்ற கோடிக் கணக்கானவர்களில், அர்ஜூனன் ஒருவன் மட்டுமே இறைவனின் விஸ்வரூப தர்ஸனத்தைப் பெற்றான் ! தலை சிறந்த இந்த பண்டிதர்களுக்கு இப்படிப் பட்ட அனுபவம் ஏன் இல்லை? அந்த உண்மை நிலையை உணருவது என்பது, அதற்குத் தகுதியுள்ள சாதகர்களுக்கே சாத்தியமாகிறது. இந்த போதனை ஆரம்பிக்கும் போது, அர்ஜூனன் ஸரணாகதியின் மிக உயர்ந்த நிலையை எய்தியிருந்தான்; அது நடக்கும் போது, ஈடு இணையற்ற மனக்குவிப்பைக் கொண்டிருந்தான். அவன் ஆசீர்வதிக்கப் பட்டதில், ஆச்சரியம் ஏதும் இல்லை.உங்களுக்கு அதே அளவு ஸரணாகதி மனப்பாங்கும், அதே அளவு தாபமும், மனக்குவிப்பும் இல்லை என்றால், அர்ஜூனன் அடைந்த பலனை, எவ்வாறு ஒருவர் எதிர் பார்க்க முடியும் ? ஸ்ரீமத் பகவத் கீதை விதிக்கும் ஸரணாகதிப் பாதை சுலபமானதல்ல; அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும், விடா முயற்சியும் தேவை.