azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone must develop the spirit of sacrifice (tyaga). You must serve the people with your body. You have to cherish good and noble thoughts in your mind. You must use your wealth for supporting educational and other institutions to help the people. Give food to the starving. This is the way to lead a purposeful and sublime life. Life has been given to you not to become fat yourself. The body is the basic instrument for the practice of righteousness (Dharma). Dedicate your entire time to service and for the proper discharge of your duties. God alone can transform your spiritual efforts into a transcendental experience. God is omnipresent; He is everywhere and within you. You are Divine! Ensure your spiritual practices (Sadhana) are not for any selfish reason. It must promote the good of others. Giving up selfishness, cultivating selfless love for others, and sanctify your lives. Then you will experience Sakshatkara, the vision of the Divine from within you. (Divine Discourse, 7th July 1990)
ஒவ்வொருவரும் தியாக உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.உங்கள் உடலின் மூலம் நீங்கள் மக்களுக்குச் சேவை ஆற்ற வேண்டும்.உங்கள் மனதில் நல்ல மற்றும் சீரிய எண்ணங்களை சிந்திக்க வேண்டும்.நீங்கள் உங்களது செல்வத்தை, கல்வி மற்றும் இதர நிறுவனங்களுக்கு அளித்து, மக்களுக்கு உதவ வேண்டும்.பசியால் வாடுபவருக்கு உணவளியுங்கள். இதுவே, ஒரு அர்த்தமுள்ள மற்றும் உன்னத வாழ்க்கை நடத்துவதற்கான வழியாகும். நீங்களே உண்டு கொழுப்பதற்காக, அளிக்கப் பட்டதல்ல இந்த வாழ்க்கை.இந்த உடலே, தர்மத்தைக் கடைப் பிடிப்பதற்கான, அடிப்படைக் கருவியாகும். உங்களது காலம் அனைத்தையும் சேவை செய்வதற்கும்,உங்களது கடமைகளை சரிவர ஆற்றுவதற்கும் அர்ப்பணியுங்கள்.இறைவன் மட்டுமே உங்களது ஆன்மீக சாதனைகளை ஒரு அதீதமான அனுபவமாக மாற்ற வல்லவன்.இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்;அவன் எங்கும், உங்கள் உள்ளும் உறைபவன். நீங்களும் தெய்வீகமே ! உங்களது ஆன்மீக சாதனைகள், சுயநல நோக்கங்களுக்காக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது மற்றவர்களது நலனைப் பேணுவதாக இருக்க வேண்டும்.சுயநலத்தை விடுத்து, பிறர் பால் தன்னலமற்ற ப்ரேமையை வளர்த்துக் கொண்டு, உங்களது வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள்.பின்னர், நீங்கள் உங்களுள் உறையும் தெய்வீகத்தின் தரிசனமான ஆத்ம சாக்ஷாத்காரத்தை அனுபவிப்பீர்கள்.