azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 Jul 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone is now seeking comfort and pleasure! If you tell someone that they can eat whatever they like and as much as they like, they will be delighted; if you add that they might develop, as a consequence, some illness, they will treat you as an enemy. No regimen or control is popular. But strength is derived only from control, restraint, and regulation. A person becomes tough and capable of endurance only if they welcome hardships. Struggle, and you get the strength to succeed. Seek the basis for the seen in the unseen. The tall skyscraper has a deep base reaching into the earth. This seen world has, as its base, the unseen Divine (Paramatma); your body is the vehicle through which you can search, investigate, and discover that base. Your body is an instrument for doing work (karma); prayer and meditation (japa and dhyana) will purify your intelligence and make it an instrument for winning grace, and ultimately attaining self-realisation. (Divine Discourse, 23-Nov-1964)
ஒவ்வொருவரும் ,இப்போது, சுக, சௌகரியங்களையே நாடுகிறார்கள்! நீங்கள் யாரிடமாவது, அவர்களுக்கு எது பிடிக்குமோ ,அதை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று கூறினால், அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைவார்கள்;அதோடு கூடவே, இதன் விளைவாக அவர்களுக்கு சில வியாதிகள் வரும் என்று சொன்னீர்கள் என்றால், அவர்கள் உங்களை ஒரு விரோதி போல நடத்துவார்கள். எந்த விதிமுறையோ அல்லது கட்டுப்பாடோ மக்களுக்குப் பிடித்தமானதல்ல. ஆனால், சக்தி என்பது, கட்டுப்பாடு, நிதானம் மற்றும் ஒழுங்குமுறையிலிருந்தே வருகிறது. கஷ்டங்களை வரவேற்பதன் மூலம் மட்டுமே, ஒரு மனிதர் வலுவானவராகவும், தாங்கும் சக்தி கொண்டவராகவும் ஆகிறார். போராடுங்கள், வெற்றி பெறுவதற்கான சக்தியை நீங்கள் பெறுவீர்கள். கண்ணால் காண்பவற்றின், கண்ணுக்குப் புலப்படாத ஆதாரத்தைத் தேடுங்கள். உயர்ந்த விண்ணைத் தொடும் அடுக்கு மாடிக் கட்டிடம், பூமிக்குள் ஆழமாகச் செல்லும் ஒரு அஸ்திவாரத்தைக் கொண்டதாகும். நாம் காணும் இந்த உலகம்,, கண்களுக்குப் புலப்படாத பரமாத்மாவை, தனக்கு ஆதாரமாகக் கொண்டது; உங்களது உடலே, அந்த ஆதாரத்தைத் தேடி, ஆராய்ந்து, கண்டு பிடிப்பதற்கான வாஹனமாகும். உங்கள் உடல், கர்மா செய்வதற்கான ஒரு கருவியே;ஜபமும்,தியானமும் உங்களது புத்தியைத் தூய்மையாக்கி, இறை அருளைப் பெறுவதற்கும், இறுதியில் ஆத்ம சாக்ஷாத்காரத்தை அடைவதற்கும் தகுந்த ஒரு கருவியாக அதை ஆக்குகின்றன.