azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Imagine, ten children go to a cloth shop and choose some material which they like. These children are then taken to a tailor, and each one gives measurements appropriate to themselves and get a suitably stitched shirt. All the children have used the same cloth to get their shirts, but each one has different measurements. This is the right thing to do! If the tailor stitched all shirts to the same size and asked all the children to wear those shirts, would it be proper? If the child is not given a shirt that fits properly, he would be very uncomfortable wearing it. Similarly, God (Brahman) is shining in the hearts of everyone and depending upon their own picture of the effulgent Brahman present within them, everyone has the right to adore that particular Name and Form. Without this freedom, how can you understand and connect with the limitless, infinite, and omnipresent Divine? (Summer Showers in Brindavan 1974, Vol 1, Ch 5)
பத்து குழந்தைகள் ஒரு துணிக் கடைக்குச் சென்று, அவர்களுக்குப் பிடித்த சில துணிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.இந்தக் குழந்தைகள் பின்னர் ஒரு தையல்காரரிடம் அழைத்துச் செல்லப் படுகிறார்கள்; ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ற அளவுகளைக் கொடுத்து, சரியாகத் தைக்கப் பட்ட ஒரு சட்டையைப் பெறுகிறார்கள்.எல்லாக் குழந்தைகளும், அவர்களது சட்டைக்கு ஒரே மாதிரியான துணியைத் தான் பயன்படுத்தினாலும், ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவை உடையவர்களாக இருப்பார்கள். இதுதான் சரியான முறை ! ஒரு வேளை தையல்காரர், எல்லாச் சட்டைகளையும் ஒரே அளவாகத் தைத்து, அந்தச் சட்டைகளை, குழந்தைகளை அணிந்து கொள்ளுமாறு சொன்னால், அது சரியாக இருக்குமா? ஒரு குழந்தைக்கு அதனது அளவிற்குப் பொருத்தமான சட்டையைக் கொடுக்கா விட்டால், அதை அணிந்து கொள்வது அதற்கு மிகவும் சங்கடமாக இருக்கும். அதைப் போலவே,பரப்ரம்மமும் ஒவ்வொருவரின் இதயத்திலும் பிரகாசித்துக் கொண்டு தான் இருக்கிறது ; அவர்களுக்குள் உறையும் பரப்பிரம்மத்தைப் பற்றி அவர்களே உருவாக்கும் ரூபத்தைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் அந்த அந்த நாம, ரூபத்தைப் போற்றுவதற்கான உரிமை இருக்கிறது. இந்த சுதந்திரம் இல்லாமல், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள எல்லையில்லாப் பரம்பொருளை, நீங்கள் எவ்வாறு புரிந்து கொண்டு அதனுடன் இணைய முடியும்?