azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 19 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 19 Jun 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Imagine a book in your hand and a friend comes by as you are reading it. On seeing the friend you ask for a loan of ten rupees. The friend is willing to give the loan but before that, he wishes to see the book you are reading. As the friend turns a few pages, he finds a ten rupee note inside the book and asks you why you want a loan when the ten rupee note is already inside the book. Immediately you respond, “I forgot about this ten rupee note that I placed in the book! I no longer need a loan”, and you are now very happy. The fact is that the ten rupee note really is yours and you forgot it, which your friend pointed out for you! So too, a real Guru points out the divine aspect within you, and draws your attention to the reservoir of strength and wisdom in your own hearts. (Summer Showers in Brindavan 1974, Vol 1, Ch 5)
உங்கள் கையில் ஒரு புத்தகம் இருக்கிறது; நீங்கள் அதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நண்பர் உங்களருகில் வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நண்பரைப் பார்த்ததும், நீங்கள் அவரிடம் ஒரு பத்து ரூபாய் கடன் கேட்கிறீர்கள்.அந்த நண்பர் உங்களுக்குக் கடன் கொடுக்கத் தயாராக இருக்கிறார், ஆனால், அதற்கு முன்பு,நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை, அவர் பார்க்க விரும்புகிறார்.அந்த நண்பர், அந்தப் புத்தகத்தின் சில பக்கங்களைப் புரட்டும் போது அதில் ஒரு பத்து ரூபாய் நோட்டு இருப்பதைக் காண்கிறார்; பத்து ரூபாய் அந்தப் புத்தகத்தில் இருக்கும் போது,உங்களுக்கு எதற்கு பத்து ரூபாய் கடன் என்று அந்த நண்பர் கேட்கிறார்.உடனே நீங்கள், ‘’ அந்தப் புத்தகத்தில் நான் வைத்திருந்த பத்து ரூபாய் நோட்டைப் பற்றி மறந்தே போய்விட்டேன்! எனக்குக் கடன் தேவையில்லை’’ என்று பதிலிளிக்கிறீர்கள். இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மை என்ன என்றால்அந்தப் பத்து ரூபாய் உண்மையில் உங்களுடையதே, அதை நீங்கள் மறந்து விட்டீர்கள்; உங்கள் நண்பர் அதை உங்களுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறார்! அதைப் போலவே, ஒரு உண்மையான குருவும், உங்களுள் உள்ள தெய்வீக அம்சத்தை சுட்டிக் காட்டி, உங்களது சொந்த இதயங்களிலேயே இருக்கும் வலிமை மற்றும் ஞானக் களஞ்சியத்தை நோக்கி உங்களது கவனத்தைத் திருப்புகிறார்.