azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Lord Krishna and Balarama (His elder brother) were willing to do hard work and showed that prosperity can be achieved through hard work. Lord Krishna was all-knowing, all-powerful, and Divinity incarnate, yet He worked as a charioteer for Arjuna. Krishna was one who recognised the importance of service to the community; and by His own example showed that service to others was important. Everyday, after the war of Mahabharata, Lord Krishna took the horses to the river, washed them and tended their wounds and applied medicines. Lord Krishna demonstrated that hard work and compassion to all living beings constitute the duty of all human beings. [Summer Roses on Blue Mountains 1976, Ch 3]
பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், அவரது மூத்த சகோதரரான பலராமரும் கடுமையாக உழைக்கச் சித்தமாக இருந்தனர்; மேலும் கடுமையான உழைப்பின் மூலம் வளம் பெற முடியும் என்பதையும் எடுத்துக் காட்டினார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அனைத்தும் அறிந்தவர்,ஸர்வ வல்லமை படைத்தவர் மேலும் இறைவனின் அவதாரமும் ஆவார்; இருந்த போதும் பார்த்தனுக்குச் சாரதியாகப் பணி புரிந்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சமுதாய சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்; தனது சொந்த உதாரணத்தின் மூலம் பிறருக்கு சேவை ஆற்றுவது எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக் காட்டினார். மஹாபாரதப் போரின் ஓவ்வொரு நாளின் போருக்குப் பின் அவர் குதிரைகளை நதிக்கு இட்டுச் சென்று, அவற்றைக் குளிப்பாட்டி, அவைகளது காயங்களைக் கவனித்து. மருந்துகளை இடுவார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கடும் உழைப்பும், அனைத்து ஜீவராசிகளிடமும் கருணையும், அனைத்து மனிதர்களின் கடமை என்பதை எடுத்துக் காட்டினார்.