azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

On a platform we parrot words like Truth, Love and Nonviolence, but in our daily life we do not have faith in Truth, we do not practice Non-violence, and we don’t follow the path of Discrimination (buddhi). Young people today must learn to put these values into practice sincerely. Your lives depend upon three things — your words, thoughts, and deeds. Whatever desires you get, you will exhibit them and take them to your mind. For getting a thought, mind is the basis. The thought that comes to your mind will be exposed to the world as words through your mouth. Once you utter words from your mouth and expose the thought that has come to your mind, now to put that into practice, you take action. It is only when there is a harmony between your thoughts, words and action that you will be able to recognise your own true nature. (Summer Roses on Blue Mountains 1976, Ch 2.)
ஒரு மேடையில் நாம் கிளிப்பிள்ளைகளைப் போல, சத்யம், ப்ரேமை மற்றும் அஹிம்ஸை போன்ற வார்த்தைகளை முழங்குகிறோம்; ஆனால், அன்றாட வாழ்க்கையில், நமக்கு சத்தியத்தில் நம்பிக்கை இருப்பதில்லை, அஹிம்ஸையைக் கடைப்பிடிப்பதில்லை, மேலும் புத்தியின் பாதையைப் பின்பற்றுவதில்லை.இளைஞர்கள், இந்நாளில், இந்தப் பண்புகளை, உளமாற நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களது வாழ்க்கை மூன்று விஷயங்களைப் பொறுத்து இருக்கிறது – உங்களது சொற்கள், சிந்தனைகள் மற்றும் செயல்கள். உங்களுக்கு எந்த விதமான ஆசைகள் தோன்றுகிறோ, நீங்கள் அதை வெளிப்படுத்தி, அவற்றை உங்களது மனதிற்குக் கொண்டு செல்கிறீர்கள். ஒரு சிந்தனை வருவதற்கு மனமே அடிப்படை. உங்கள் மனதில் வரும் சிந்தனை, உங்கள் வாயிலிருந்து வரும் சொற்களால் உலகிற்கு வெளிப்படுத்தப் படுகிறது.ஒருமுறை நீங்கள், உங்கள் வாயால் சொற்களைக் கூறி, உங்கள் மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்திய பின், அதை நடைமுறைப் படுத்த செயலில் ஈடுபடுகிறீர்கள்.உங்கள் சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களில் இசைவு இருந்தால் தான் நீங்கள் உங்களுக்கே உரித்த உண்மையான இயல்பை, உணர்ந்து கொள்ள முடியும்.