azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

A prescribed quality is exhibited or worn as a cloak by every entity in creation. This quality is also called its dharma. Just as a student in a particular class can be promoted to a higher class by effort, an individual by promoting one's own natural dharma, and giving attention to something higher and nobler, can earn promotion to a higher level. A piece of iron is worth only a few pennies, but by making suitable changes to it, you produce a watch worth a thousand rupees. Observe here that it is the Samskara, or the change that we give to the substance, that brings the value to it and not the inherent value of the untreated material. Even an ordinary person can get an opportunity to elevate oneself to the position of a realised sage (Paramahamsa), by seeking the company of elevated beings. (Summer Roses on Blue Mountains 1976, Ch 2)
படைப்பில் ஒவ்வொன்றும், ஒரு குறிப்பிட்ட குணத்தை வெளிக்காட்டவோ அல்லது அதை ஒரு அங்கி போல அணிந்து கொள்ளவோ செய்கின்றன.இந்த குணமே அதனது ஸ்வதர்மம் என்றும் அழைக்கப் படுகிறது.ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருக்கும் ஒரு மாணவர் அவரது முயற்சியின் காரணமாக எவ்வாறு மேல் வகுப்பிற்கு முன்னேற்றப் பட முடியுமோ அவ்வாறே,ஒரு தனி மனிதனும் தனது ஸ்வதர்மத்தை அனுசரித்து,மேன்மையான மற்றும் சீரியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், ஒரு உயர்ந்த நிலைக்கு முன்னேற முடியும். ஒரு இரும்புத் துண்டு வெறும் சில பைசாக்கள் மதிப்புள்ளதாக இருக்கலாம், ஆனால்,அதில் சில தேவையான மாற்றங்கள் செய்வதன் மூலம், நீங்கள் அதை பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு கடிகாரமாக உருவாக்குகிறீர்கள். ஸம்ஸ்காரம் அல்லது நாம் ஒரு பொருளுக்கு அளிக்கும் மாற்றமே, அதற்கு மதிப்பைக் கொண்டு வருகிறதே அன்றி, அந்தப் பொருளின் இயல்பான மதிப்பால் அல்ல என்பதை இங்கு கவனியுங்கள். ஆன்றோர்களின் நட்பு வட்டத்தை நாடுவதன் மூலம்,ஒரு சாதாரண மனிதன் கூட, ஒரு பரமஹம்ஸரின் நிலைக்கு, உயருவதற்கான வாய்ப்பைப் பெற முடியும்.