azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 16 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 16 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Bharatiyas lead lives of hope. The Bharatiya culture teaches that one must never lose hope. To suffer from lack of faith and to lose hope is not only losing all the strength within, but it also amounts to demeaning the human birth. Utsaham (Enthusiasm) and Shraddha (earnestness and interest) are things which will show the way for the progress of man. Every individual having such Utsaham and Shraddha is sure to achieve success and attain glory in any kind of work undertaken. It is also said that one who possesses this Shraddha will attain wisdom too (Shraddhavan Labhate Jnanam). So we should make an attempt to go through the journey of our life with interest and enthusiasm (Summer Showers in Brindavan 1974, Vol 1, Ch 2.)
பாரத மக்கள் நம்பிக்கையுடனான வாழ்க்கை நடத்துபவர்கள்.பாரத கலாசாரம், ஒருவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறது. விசுவாசக் குறைவால் வருந்துவதும், நம்பிக்கை இழப்பதும் உள்ளார்ந்த வலிமை அனைத்தையும் இழக்கச் செய்வதோடு மட்டும் அல்லாமல், அது மனிதப் பிறவியையே இழிவு படுத்துவது போலாகும்.உற்சாகமும், சிரத்தையுமே மனித முன்னேற்றத்திற்கான பாதையைக் காட்டுபவைகளாகும். இப்படிப் பட்ட உற்சாகமும், சிரத்தையும் கொண்ட ஒவ்வொருவரும் அவர்கள் எடுத்துக் கொண்ட எந்தக் காரியமாக இருந்தாலும் கண்டிப்பாக அதில் வெற்றி பெற்று, புகழடைவார்கள். மேலும்,உற்சாகமும், சிரத்தையும் உடையவர்கள் ஞானமும் பெறுவார்கள்( ஸ்ரத்தாவான் லபதே ஞானம்) என்று கூறப்படுகிறது. எனவே, நாம் நமது வாழ்க்கைப் பயணத்தை உற்சாகம் மற்றும் சிரத்தையுடன் நடத்த முயல வேண்டும்.