azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Imagine a golden necklace around your mother or sister’s neck. When you look at this form of an ornament, you call it a necklace; but when you look at the basic material in it, you say it is made up of gold. It cannot be that gold is one thing and the necklace is a different thing. It is not possible to make a necklace without gold. So when you call it a gold ornament, it only demonstrates the oneness of the basic material that is the gold, and the name and form, namely the necklace. In the same manner, by recognising the oneness of humanity on the one hand and the underlying divinity on the other hand, we should be able to proclaim the greatness of our culture and spiritual education. (Divine Discourse, Summer Showers in Brindavan 1974, Ch 2)
உங்கள் தாயார் அல்லது சகோதரியின் கழுத்தில் ஒரு தங்க நெக்லேஸ் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த ஆபரணத்தின் ரூபத்தைப் பார்க்கும் போது நீங்கள் அதை ஒரு நெக்லேஸ் என்று கூறுகிறீர்கள்; ஆனால் அதில் உள்ள அடிப்படைப் பொருளைப் பார்க்கும் போது அது தங்கத்தினால் ஆனது என்கிறீர்கள். தங்கமும், நெக்லேஸும் வெவ்வேறு பொருட்கள் என்று கூற முடியாது. தங்கம் இன்றி நெக்லேஸ் செய்ய முடியாது. எனவே, அதை நீங்கள் ஒரு தங்க ஆபரணம் என்று கூறும்போது,அடிப்படைப் பொருளான தங்கமும், அதற்குத் தரப்பட்ட நாம,ரூபமான நெக்லேஸும் ஒன்று என்பதைத் தான் அது எடுத்துக் காட்டுகிறது. அதைப் போலவே, ஒரு பக்கம் மனித குலமும், மறுபக்கம் அதற்கு அடிப்படையாக உள்ள தெய்வீகமும் ஒன்றே தான் என்பதை உணர்வதன் மூலம், நாம், நம்முடைய கலாசாரம் மற்றும் ஆன்மீகக் கல்வியின் மேன்மையை பறைசாற்ற முடியும்.