azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

God descends and takes on the human form only to change the lives of humans by His own example. Only humans descend to the depths of degradation by their utter disregard of their dharma (code of conduct) and Divinity. Birds and beasts firmly adhere to their own respective dharmas. There is no need for the Avatar to arise amongst birds and beasts since dharma has not declined in them. Lord Krishna declared, “I come down for the protection of the good” (Paritranaya sadhunam). God always protects the virtuous. There is no use merely lisping Rama’s name. Emulate Rama and transform yourselves by following the path of Love. However deep and great your scholastic eminence may be, one cannot achieve anything without undergoing the transformation of the mind. (Divine Discourse, Summer Roses on Blue Mountains, 1996, Ch 2)
மனிதர்களது வாழ்க்கையை தனது சொந்த உதாரணத்தின் மூலம் மாற்றுவதற்காகவே இறைவன், மனித ரூபம் தரித்து, இற(ர)ங்கி வருகிறான். மனிதர்கள் மட்டுமே தங்களது தர்மத்தையும், தெய்வீகத்தையும் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாது, சீரழிவின் ஆழத்திற்கே இறங்கி விடுகிறார்கள்.பறவைகளும், மிருகங்களும், தத்தம் ஸ்வதர்மத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கின்றன. பறவைகள் மற்றும் மிருகங்கள் நடுவில், அவற்றின் தர்மம் வீழ்ச்சி அடையாததால், அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ‘’நல்லவர்களைக் காப்பதற்காக நான் இற(ர)ங்கி வருகிறேன் ( பரித்ராணாய ஸாதூனாம் )’’ என்கிறார். இறைவன் நல்லவர்களை எப்போதும் காக்கிறான்.ஸ்ரீராம நாமத்தை வெறுமனே உச்சரிப்பதால் மட்டும் பயனில்லை. ஸ்ரீராமரை முன்மாதிரியாகக் கொண்டு, அன்பின் பாதையைப் பின்பற்றுவதன் மூலம் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களது பாண்டித்யம் எவ்வளவு ஆழ்ந்ததாகவும், சிறந்ததாகவும் இருந்தாலும், மனமாற்றம் அடையாமல், ஒருவர் எதையும் சாதிக்க முடியாது.