azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 May 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

We should not delude ourselves into thinking that the Avatar is a simple human form like ourselves. His form may be human; but His majesty and magnificence are Infinite. The principle of Rama is most sacred, sublime and glorious. There is nothing in the world that cannot be achieved by cultivating the Rama Principle (Rama Thathwa). Though thousands of years have elapsed since Ramayana took place, the Rama Principle is deeply imprinted in the hearts of the people. It is ever fresh, ever new and embraces infinitude itself. The Rama Principle is contained in the smallest of the small and the largest of the large. It is not confined to the name and form. It is a transcendental principle, which transcends time itself. True seekers will understand the true nature of humanity by realizing the Rama Principle. (Summer Showers Ch2, May 20, 1996.)
ஒரு அவதார புருஷரும், நம்மைப் போலவே ஒரு சாதாரண மனித உருவமே என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. அவரது ரூபம் மனிதராக இருக்கலாம்; ஆனால் அவரது மாட்சிமையும், மகத்துவமும் அளவற்றவை. ஸ்ரீராம தத்துவம் மிகவும் புனிதமானதும்,புடமிடப்பட்டதும், புகழ் வாய்ந்ததும் ஆகும். ஸ்ரீ ராம தத்துவத்தை வளர்த்துக் கொண்டால், இந்த உலகில் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.ஸ்ரீமத் ராமாயணம் நடந்து பல்லாயிரக் கணக்கான வருடங்கள் கழிந்து விட்டாலும், ஸ்ரீராம தத்துவம் மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. இது நித்ய நூதனமானது; அளவற்ற இரகசியங்களைக் கொண்டது. அணுவில் அண்டமாய், அண்டத்தில் அணுவாய், இருப்பதை நிரூபிப்பது இது. இது ஒரே ஒரு நாம, ரூபத்தில் மட்டுமே அடங்கி உள்ளதல்ல. இது காலத்திற்கு எல்லாம் அப்பாற்பட்ட, அறிவிற்கெல்லாம் அப்பாற்பட்ட தத்துவமாகும். ஸ்ரீராம தத்துவத்தை உணருவதன் மூலம், உண்மையான ஆன்மீக சாதகர்கள், மனித குலத்தின் உண்மையான இயல்பைப் புரிந்து கொள்வார்கள்.