azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 29 Apr 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 29 Apr 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

A person’s life depends upon three essential things - thoughts, words and deeds. When When desires arise, one immediately takes it to their mind. For any thought, mind is the basis. The thought that comes to your mind will be exposed to the world as a word from your mouth, and once you utter those words, then, to put it into practice, you take action. When you are able to apply these three—thought, word, and action along the right path, you earn merit (punya); but if you apply them along the wrong path, you earn sin. Thus for good and bad, you need thoughts, words, and deeds. Only when there is harmony between thoughts, words, and actions; you will be able to recognise your own true nature. To keep them pure and in harmony, you must undertake some kind of sadhana (spiritual practice). This is of utmost need today. (Divine Discourse, Summer Roses on Blue Mountains, 1976, Ch 2.)
ஒருவரது வாழ்க்கை மூன்று இன்றியமையாதவற்றைப் பொறுத்தே இருக்கிறது- சிந்தனைகள்,சொற்கள் மற்றும் செயல்கள்.ஆசைகள் உருவாகும் போது, ஒருவர் அவற்றை மனதிற்கு எடுத்துச் செல்கிறார்.எந்த சிந்தனைக்கும் மனமே ஆதாரம்.உங்கள் மனதில் எழும் சிந்தனை இந்த உலகத்திற்கு ஒரு சொல்லாக உங்களது வாயிலிருந்து வெளிப்படுகிறது; ஒருமுறை அந்த சொற்களைக் கூறிய பின் ,அதை நடைமுறைப் படுத்துவதற்காக,நீங்கள் செயலாற்றுகிறீர்கள். எப்போது நீங்கள் இந்த மூன்றையும் -சிந்தனை,சொல் மற்றும் செயலை சரியான பாதையில் பயன்படுத்துகிறீர்களோ, அப்போது புண்ணியத்தை சம்பாதிக்கிறீர்கள்; ஆனால், அவற்றைத் தவறான பாதையில் பயன்படுத்தினால் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறீர்கள்.இவ்வாறு நல்லவற்றிற்கும், கெட்டவற்றிற்கும் உங்களுக்கு சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்கள் தேவைப் படுகின்றன.எப்போது, உங்கள் சிந்தனை,சொல் மற்றும் செயல்களில் இசைவு இருக்கிறதோ,நீங்கள் உங்களது உண்மையான இயல்பை உணர முடியும்.அவற்றை தூய்மையாகவும்,இசைவுடனும் வைத்துக் கொள்வதற்கு, நீங்கள் ஏதோ ஒருவிதமான ஆன்மீக சாதனையை மேற்கொண்டே ஆக வேண்டும். இன்றைய தலையாய அவசியம் அதுவே.