azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Parents today lavish too much affection on their children. But such affection alone is not enough. There should be both ‘love’ and ‘law’. Only when both love and restraint are present will the love prove beneficial. For all the evil habits of children, who are naturally innocent and uninformed, the parents are primarily responsible. Parents today do not make any efforts to teach proper ways of behaviour to the children. They pamper the children by giving them money and gifts freely. They want their children to become officers, to earn large incomes, acquire wealth and lead a life of comfort and ease. But they do not consider for a moment how they should make the children realise the need to develop good qualities. It is up to parents to teach the children to cultivate right attitudes and moral qualities. Parents should feel happy only when they see their children leading blameless lives, acquiring a good name and behaving properly. (Divine Discourse, Feb 5, 1984)
பெற்றோர்கள் இந்நாளில், தங்களது குழந்தைகளுக்கு அளவுக்கு மீறிய செல்லம் கொடுக்கிறார்கள்.ஆனால் இப்படிப் பட்ட செல்லம் மட்டும் போதுமானதல்ல. ’’ அன்பும்’’ இருக்க வேண்டும்; ‘’ கண்டிப்பும்’’ இருக்க வேண்டும்.அன்பு, கண்டிப்பு என்ற இரண்டும் இருந்தால் தான் அன்பு பயனளிக்கும். இயற்கையிலேயே அப்பாவிகளாகவும், விவரம் அறியாதவர்களாகவும் இருக்கும் குழந்தைகளிடம் உள்ள அனைத்துத் தீய குணங்களுக்கும் பெற்றோர்களே முதற்கண் காரணமாவார்கள். இன்று , பெற்றோர்கள் சரியான நடத்தை முறைகளைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதற்கு எந்த விதமான முயற்சிகளும் எடுத்துக் கொள்வதில்லை.பணத்தையும், பரிசுகளையும் தாராளமாகக் கொடுத்து அவர்களுக்குச் செல்லம் கொடுக்கிறார்கள்.அவர்கள் தங்கள் பிள்ளைகள் பெரிய அதிகாரிகளாக உருவாகி,கை நிறைய சம்பாதித்து,செல்வத்தை ஈட்டி, ஒரு சொகுசான வாழ்க்கை நடத்த வேண்டும் என விரும்புகிறார்கள்.ஆனால், அவர்கள் எவ்வாறு குழந்தைகளுக்கு, நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதன் அவசியத்தைப் புரிந்து கொள்ள வைப்பது என்பதைப் பற்றி ஒரு கணம் கூடச் சிந்திப்பதில்லை. சரியான மனப்பாங்குகளையும்,நற்குணங்களையும் வளர்த்துக் கொள்வதைக் குழந்தைகளுக்குப் போதிப்பது பெற்றோர்களின் கையில் தான் இருக்கிறது.தங்களது குழந்தைகள் அப்பழுக்கற்ற வாழ்க்கை நடத்தி,நல்ல பெயர் எடுத்து, முறையாக நடந்து கொள்வதைப் பார்க்கும் போது தான் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.