azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Dharma when wedded to great a soul called Truth (Sathya), the children of Earnestness (Shraddha), Compassion (Daya), Peace (Shanti), Prosperity (Pushti), Contentment (Shanthushti), Progress (Vriddhi), Modesty (Lajja), Honour (Gouravam) and Liberation (Mukthi) will arise. Carefully examine yourself, if you are from the above Dharma lineage or from that of Ignorance (Mithya) and Unrighteousness (Adharma). When you assiduously practice Dharma, the Divinity within you will manifest itself spontaneously. Do not limit Dharma to mere words. You are the very embodiment of righteousness. But you will not be worthy of this appellation if you do not lead a life of Dharma. Everyone must realise that to attain oneness with Divinity is the goal of human life. Hence it is your primary duty to develop faith in the Divine. With faith, you will lead a life devoted to Dharma, Sathya and Neethi (Righteousness, Truth and Justice), and achieve the purpose of your birth. (Divine Discourse, 19 Jan 1984)
தர்மம், தலைசிறந்த சத்தியத்துடன் திருமணத்தில் இணையும் போது,சிரத்தை, தயை, சாந்தி, வளமை (புஷ்டி), திருப்தி (சந்துஷ்டி), முன்னேற்றம் (விருத்தி), லஜ்ஜை, கௌரவம் மற்றும் முக்தி எனும் குழந்தைகள் உருவாகின்றனர்.நீங்கள் இந்த தர்ம சந்ததி வந்தவர்களா அல்லது மித்யா மற்றும் அதர்மத்தின் சந்ததியிலிருந்து வந்தவர்களா என உங்களையே நீங்கள் கவனமாகச் சோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அயர்வின்றி தர்மத்தைக் கடைப்பிடிக்கும் போது, உங்களுள் உள்ள தெய்வீகம் தானாகவே வெளிப்படும். தர்மத்தை வெறும் வார்த்தைகளோடு நிறுத்தி விடாதீர்கள்.நீங்களே தர்மத்தின் திருவுருவங்கள். ஆனால், நீங்கள் தார்மீகமான வாழ்க்கை நடத்தாவிடில், இந்தப் பட்டத்திற்கு தகுதி அற்றவர்கள். தெய்வீகத்துடன் ஒன்றரக் கலப்பதே தனித வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.எனவை, தெய்வத்தின் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது உங்களது தலையாய கடமையாகும். இறை நம்பிக்கையுடன், தர்மம்,சத்தியம் மற்றும் நீதிக்கு அர்ப்பணிக்கப் பட்ட வாழ்க்கையை நடத்தி, உங்களது பிறவிப் பயனை அடையுங்கள்.