azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 10 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 10 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

When there is no possibility of achieving and acquiring devotion, charity, peace, and truth, the great and good people who desire to achieve them pray to the Lord within themselves. When the Lord’s will, the needs of spiritual seekers, and the teachings of great persons unite, the happiness of the world will be assured and undiminished. If all humanity prays at one time for unrest, injustice, disorder, and falsehood to be transformed into peace, truth, love, and mutual service, things will certainly become better. There is no other way out. Worrying is fruitless. This is no occasion for despair. It is against the essential nature of people to plead weakness and want of strength. Therefore giving up the search for other means, people must try prayer, service to others, and mutual love and respect. They should delay no longer; they will soon acquire contentment and joy.(Prema Vahini, Ch 70.)
பக்தி,கருணை,சாந்தி மற்றும் சத்தியம் ஆகியவற்றைப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத போது, அவற்றைப் பெற விழையும் ஆன்றோர்களும், சான்றோர்களும், அவர்களுள் உறையும் இறைவனைப் பிரார்த்திக்கிறார்கள். எப்போது இறைவனது ஸங்கல்பம்,ஆன்மீக சாதகர்களது தேவைகள், ஆன்றோர்களின் உபதேசங்கள் ஆகியவை ஒன்று சேருகின்றனவோ, இந்த உலகின் சந்தோஷம் உறுதி செய்யப்பட்டு, குறைவின்றி இருக்கும். மனிதகுலம் அனைத்தும் ஒரே சமயத்தில்,கலகம்,அநீதி, நிலைகுலைவு மற்றும் அசத்தியம் ஆகியவை, சாந்தி,சத்தியம்,அன்பு மற்றும் பரஸ்பர சேவை ஆகியவையாக மாற வேண்டும் எனப் பிரார்த்தித்தால்,நிலைமை கண்டிப்பாக நல்ல மாதிரியாக ஆகி விடும். இதைத் தவிர வேறு வழியில்லை.கவலைப் படுவது பயனற்றது. மனச்சோர்வு அடையத் தேவை இல்லை. பலஹீனமாகவும் மற்றும் சக்தியின்றியும் இருப்பதாகப் புலம்புவது மனிதர்களின் இயல்புக்கு எதிரானதாகும். எனவே, பிற வழிகளைத் தேடுவதை விட்டு விட்டு, மனிதர்கள் பிரார்த்தனை செய்வது, பிறருக்குச் சேவை செய்வது, பரஸ்பர அன்பு மற்றும் மரியாதை ஆகியவற்றைக் கையாள வேண்டும். காலதாமதம் செய்யக் கூடாது; அவர்கள் வெகு விரைவில் திருப்தியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.