azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Mar 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Police and rulers can overcome only external foes; they have no power to destroy the internal enemies. The internal foes, the six enemies (arishadvarga) that operate inside a person, can be uprooted only by the teachings of the Lord, love of God, and the company of the holy and the great. The world suffers harm at the hands of wicked people when the police and the authorities fail in their duties. Similarly, the world is enveloped in darker ignorance when ‘great’ spiritual aspirants give up the path of world welfare, become victims of sense enjoyment and nurture ambition to earn name and fame. Spiritual elders are the rulers of the internal state; administrative authorities are the rulers of the external state. The whole world will bask in peace and joy only when worldly authorities and spiritual aspirants realise their duties and perform them with the right attitudes, with the welfare of all at heart, remembering the omnipotence of the Lord. (Prema Vahini, Ch 69)
காவல் துறையும், அரசும், வெளிப்புறத்தில் உள்ள எதிரிகளைத் தான் வெல்ல முடியும்;உள்ளார்ந்த விரோதிகளை அழிக்கும் சக்தி அவர்களுக்கு இல்லை. ஒரு மனிதனுள் இயங்கும் உள்ளார்ந்த எதிரிகளான ( அரிஷட்வர்கா -காம, க்ரோத, லோப, மோஹ, மத ,மாத்ஸர்ய) போன்றவற்றை,இறைவனின் உபதேசங்கள், இறைவன் பால் அன்பு, புனிதமான ஆன்றோரின் நட்பு வட்டம் ஆகியவற்றால் மட்டுமே வேறோடு களைய முடியும்.காவல் துறையும், அரசாங்கமும், தங்களது கடமைகளில் தவறும்போது, இந்த உலகம், தீய மனிதர்களின் கைகளால் பாதிக்கப் படுகிறது.அதைப் போலவே,’’ உயர்ந்த ‘’ ஆன்மீக சாதகர்கள், உலக க்ஷேமத்தின் பாதையை விடுத்து,புலனின்பங்களுக்கு அடிமையாகி, பெயரும், புகழும் பெற விழையும்போது, இந்த உலகம் அறியாமை என்ற இருளால் சூழப்பட்டு விடுகிறது. ஆன்மீக ஆன்றோர்கள் உள்ளார்ந்த ராஜ்யத்தை ஆளுபவர்கள்; அரசாங்க நிர்வாகிகள் வெளிப்புற ராஜ்யத்தை ஆளுபவர்கள். உலகியலான அதிகாரிகளும், ஆன்மீக சாதகர்களும் தங்களது கடமைகளை உணர்ந்து, அவற்றை சரியான மனப்பாங்குடனும், அனைவரின் நலத்தைக் கருத்தில் கொண்டும், இறைவனின் அளவற்ற ஆற்றலை நினைவில் வைத்தும், ஆற்றினால் மட்டுமே, இந்த உலகம் சாந்தி, சந்தோஷங்களில் திளைத்து இருக்கும்.