azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

“The world is impermanent. Birth is a misery. Old age is a misery. Be careful!\" says a Sanskrit poem. As long as you are alive, everyone would seem to love the body. This is for purely selfish reasons. God alone is utterly selfless. Love God and lead your normal lives; there is nothing wrong in this. Whatever you do, treat it as an offering to God. See God in everyone. Don\'t have ill will towards anyone. Do not have excessive attachment for anyone. Direct all attachment towards God. Love all. Do not rely on anyone except God. Realise the impermanence of the body and place your trust solely in God. Seek refuge in Him. What is most needed today in this Kali age is faith. As often as possible, when you get the chance, meditate on God. Earn the esteem of society through sincere service. That will ensure a good future for you. (Divine Discourse, Aug 16, 1996)
“இந்த உலகம் நிலையற்றது.பிறப்பு ஒரு துன்பம்;முதுமை ஒரு துன்பம், கவனமாக இருங்கள் ‘’ என்கிறது ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம்.நீங்கள் உயிரோடு இருக்கும் வரை ஒவ்வொருவரும் இந்த உடலை நேசிப்பது போலத் தோன்றுகிறது. இது வெறும் சுயநலமான காரணங்களுக்காவே,இறைவன் ஒருவன் மட்டுமே சுயநலமற்றவன். இறைவனை நேசித்து உங்களது வாழ்க்கையை நடத்துங்கள்; அதில் எந்தத் தவறும் இல்லை.நீங்கள் எதைச் செய்தாலும் அதை இறைவனுக்கு அற்பணமாகச் செய்யுங்கள். ஒவ்வொருவரிலும் இறைவனைக் காணுங்கள்.எவரிடம் த்வேஷம் கொள்ளாதீர்கள். எவர் மீதும் அளவுக்கு மீறிய பாசம் கொள்ளாதீர்கள். அனைத்துப் பற்றுதலையும் இறைவன் பால் செலுத்துங்கள்.அனைவரையும் நேசியுங்கள்.இறைவனைத் தவிர எவர் மீதும் சார்ந்திருக்காதீர்கள். இந்த உடலின் நிலையற்ற தன்மையை உணர்ந்து உங்களது நம்பிக்கையை இறைவன் மீது மட்டுமே வையுங்கள்.அவனிடமே அடைக்கலம் புகுங்கள்.இந்த கலியுகத்தில் இன்றைய தேவை இறை நம்பிக்கையே.எவ்வளவு முடியுமோ, எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ, அப்போதெல்லாம் இறைவனை தியானியுங்கள். உளமார்ந்த சேவையின் மூலம் சமூகத்தின் மதிப்பைப் பெறுங்கள். அது உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உறுதி செய்யும்.