azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 25 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 25 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Expansion is the keynote of education. The first step for this expansion is the home, where you must revere and please your parents who gave you this chance to live and learn. If you ill-treat them or inflict grief on their minds, how can you ever gladden others by service and understanding? You know that when a balloon is blown, it bursts and the air inside it merges with the vast limitless expanse outside. So too your love must fill your home and your society, and finally burst even those bonds and become worldwide. A drop of water held in the palm evaporates soon; it is very solitary. But drop it into the sea - it survives! It assumes the name, the majesty and the might of a sea! Cultivate the seeds of love in all hearts! (Divine Discourse, Jul 25, 1975)
விசாலமான மனப்பாங்கே கல்வியின் முக்கிய குறிக்கோளாகும்.அந்த விசாலமடையச் செய்வதன் முதல் படி, உங்களது இல்லமே; அதில் உங்களுக்கு வாழவும், கல்வி கற்கவும் வாய்ப்பளித்த பெற்றோரை நீங்கள் மதித்து,மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும்.நீங்கள் அவர்களைக் கொடுமைப் படுத்தவோ அல்லது அவர்களது மனங்களைப் புண்படுத்தவோ செய்வீர்களே ஆனால், நீங்கள் எவ்வாறு மற்றவர்களை உங்களது சேவை மற்றும் கனிவால் மகிழ்விக்க முடியும்? ஒரு பலூனை ஊதிக் கொண்டே இருந்தால், அது வெடித்து அதில் உள்ள காற்று வெளியில் உள்ள எல்லையற்ற பரந்த வானத்துடன் கலந்து விடும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.அதைப் போலவே, உங்களது ப்ரேமையும் உங்கள் இல்லம் மற்றும் சமுதாயத்தை நிரப்புவதோடு, இறுதியில் அந்த பந்தங்களையும் கடந்து உலகளாவியதாக ஆக வேண்டும். உள்ளங்கையில் வைக்கப் படும் ஒரு துளி நீர் வெகு விரைவில் ஆவியாகி விடும்; அது தனித்து இருப்பதால். ஆனால் கடலில் இடப்படும் ஒரு துளி நீர் -அது பிழைத்துக் கொள்கிறது! அது ஒரு கடலின் பெயர், புகழ் மற்றும் பலத்தைப் பெற்று விடுகிறது ! அனைத்து இதயங்களிலும் அன்பின் விதைகைளப் பயிரிடுங்கள் !