azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

None can escape from the reaction, reflection, and resound of their actions. Everyone will have to experience the consequences of their own actions. People who indulge in evil practices become distant from God. People who earn a bad reputation through their evil deeds will have no place in divine proximity. Therefore have a check on yourself when you laugh or scorn at others. Not just this, your speech and vision also must be in check. Some people sing inappropriate songs and eve tease women walking on the road. Has God given you a tongue to sing such vulgar songs? How sacred is the tongue, and what an evil use you put it to? By acting in an inappropriate manner, you ruin your reputation and subject yourself to ridicule by others. Therefore exercise control over your speech, vision, and laughter. If you want to earn a good name in the society and be respected by it, conduct yourself in a befitting manner. (Divine Discourse 09 Jul 1996.)
எவரும் தங்களது செயல்களின் பிரதிசெயல்,பிரதிபலிப்பு, பிரதித்வனி ஆகியவற்றிலிருந்து தப்ப முடியாது. ஒவ்வொருவரும் தங்களது சொந்த வினைகளின் பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும்.தீய செயல்களில் ஈடுபடுவர்கள் இறைவனிடமிருந்து விலகிப் போய் விடுகிறார்கள். தங்களது தீய செயல்களின் மூலம் கெட்ட பெயர் வாங்கியவர்களுக்கு இறைவனது சன்னிதானத்தில் இடம் இல்லை. எனவே, பிறரை எள்ளி நகையாடும்போதும் அல்லது தூற்றும்போதும், உங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள். இது மட்டும் அல்ல, உங்களது பேச்சும், பார்வையும் கட்டுக்குள் இருக்க வேண்டும். சிலர் முறையற்ற பாடல்களை பாடவும், தெருவில் செல்லும் பெண்களை வம்புக்கு இழுக்கவும் செய்கிறார்கள். இறைவன் இப்படிப் பட்ட ஆபாசமான பாடல்களைப் பாடுவதற்காகவா, உங்களுக்கு ஒரு நாவைக் கொடுத்திருக்கிறான்? உங்களது நாக்கு எவ்வளவு புனிதமானது, அதை இப்படிப் பட்ட தீய வழியிலா நீங்கள் பயன்படுத்துவது ? ஒரு முறையற்ற வழியில் நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் உங்களது பெயரைக் கெடுத்துக் கொண்டு மற்றவர்களின் இகழ்ச்சிக்கு ஆளாகிறீர்கள். எனவே, உங்களது பேச்சு, பார்வை மற்றும் சிரிப்பைக் கட்டுப்படுத்துங்கள். நீங்கள் சமுதாயத்தில நல்ல பெயர் எடுத்து, அதனால் மதிக்கப் பட வேண்டும் என்றால், அதற்குத் தகுந்த படி நடந்து கொள்ளுங்கள்.