azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 14 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 14 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

When you satisfy God, the entire world will be satisfied with you. If God disowns you, then the world will also disown you. Hence, there is no need for you to make efforts to please this person or that person. Do not waste your life in the pursuit of mean and petty desires. Make earnest efforts to please God. When you please God and become dear to Him, the entire world will become yours. Thyagaraja sang, “Oh Rama! If I have Your Grace (Anugraha), all the nine planets (navagraha) will become subservient to me.” To become recipients of God’s grace, treat the pairs of opposites like pleasure and pain, happiness and sorrow, praise and blame with equal-mindedness. Always contemplate on God’s Divine Name and become deserving of His love. Once you become the recipients of God’s love, you need not be afraid of anything. You will achieve everything in life. Therefore, develop equal-mindedness and make efforts to earn divine grace. (Divine Discourse, 9 Jul 1996)
நீங்கள் இறைவனைத் திருப்திப் படுத்தினால், அகில உலகமும் திருப்தி அடையும். இறைவன் உங்களைக் கைவிட்டு விட்டால், இந்த உலகமும் உங்களைக் கை விட்டு விடும்.எனவே, நீங்கள் இந்த மனிதரையோ அல்லது அந்த மனிதரையோ திருப்திப் படுத்த முயற்சி செய்யத் தேவை இல்லை.உங்களது வாழ்க்கையை கீழ்த்தரமான மற்றும் அற்பமான ஆசைகளில் வீணடிக்காதீர்கள். இறைவனை மகிழ்விப்பதற்கு உளமார்ந்த முயற்சி செய்யுங்கள்.நீங்கள் இறைவனை மகிழ்வித்து அவனுக்கு நெருக்கமானவர் ஆகி விட்டால், இந்த அகிலம் அனைத்தும் உங்களுடையதாகி விடும். பக்த தியாகராஜர், ‘’ஓ ராமா! உன்னுடைய அனுக்ரஹம் மட்டும் உனக்கு இருந்து விட்டால், நவக்ரஹங்களும் எனக்கு ஏவல் செய்யுமே ‘’ எனப் பாடினார்.இறை அருளுக்குப் பாத்திரமாவதற்கு, எதிர் மறை இரட்டைகளான, சுகம்-துக்கம், மகிழ்ச்சி-வருத்தம், புகழ்ச்சி- இகழ்ச்சி ஆகியவற்றை சமச்சீரான மன நிலையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். ஸதா ஸர்வ காலமும் இறை நாமத்தை தியானித்து,அவனது அன்பிற்குப் பாத்திரமாகுங்கள்.நீங்கள் ஒருமுறை இறை அன்பைப் பெற்று விட்டால், நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை.நீங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் சாதிப்பீர்கள். எனவே, சமச்சீரான மனநிலையை வளர்த்துக் கொண்டு, இறை அருளைப் பெற முயற்சி செய்யுங்கள்.