azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 12 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 12 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Quarreling at every tiny little thing, losing one’s temper, becoming sad at the slightest provocation, getting angry at the smallest insult, worried at thirst, hunger, and loss of sleep — these can never be the characteristics of an aspirant. Rice in its natural state and boiled rice — can these two be the same? The hardness of natural rice is absent in the boiled one. The boiled grain is soft, harmless, and sweet. The unboiled raw grain is hard, conceited, and full of delusion. Both types are souls (jivis) and humans no doubt, but those immersed in external illusions (avidya-maya) are ‘people’, while those immersed in internal illusions (vidya-maya) are ‘spiritual aspirants’. God has neither internal illusions nor external illusions; He is devoid of both. The one who has no external illusions, becomes a spiritual aspirant, and when they are devoid of internal illusions too, they can be termed as God. Such a person’s heart is truly the seat of God. (Prema Vahini, Ch 59)
ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சண்டை போடுவது, தனது சமநிலையை இழப்பது,இம்மியளவு ஆத்திரமூட்டப்பட்டாலும் துக்கமடைவது, மிகச் சிறிய அவமதிப்பிலும் கோபமடைவது,பசி,தாகம் அல்லது தூக்கமின்மையைப் பற்றிக் கவலை கொள்வது, ஆகியவை ஒருபோதும் ஆன்மீக சாதகரது குணாதிசியங்களாக இருக்க முடியாது. அரிசி தனது இயல்பான நிலை, மேலும் சமைக்கப் பட்ட நிலை- இந்த இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்க முடியுமா? இயல்பான அரிசியின் கடினத்தன்மை ,சமைக்கப் பட்ட அரிசியில் இருக்காது.சமைக்கப் பட்ட அரிசி மிருதுவானதாகவும், கெடுதல் விளைவிக்காததாகவும், இனிமையாகவும் இருக்கும்.வேக வைக்கப் படாத தானியம், கடினமாகவும், இறுமாப்பு கொண்டதாகவும், மாயையில் மூழ்கியதாகவும் இருக்கும். இந்த இரண்டு விதமானவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி ஜீவிகள் மற்றும் மனிதர்களே; ஆனால் வெளிப்படையான மாயையில் (அவித்யா- மாயா ) மூழ்கியிருப்பவர்கள் வெறும் ‘’ மனிதர்கள் ‘’, உள்ளார்ந்த மாயையில் ( வித்யா-மாயா) ஆழ்ந்திருப்பவர்கள், ‘’ ஆன்மீக சாதகர்கள்’’. இறைவனுக்கு உள்ளார்ந்த மாயையோ அல்லது வெளிப்புறமான மாயையோ இல்லை. அவன் இந்த இரண்டும் அற்றவன். வெளிப்புறமான மாயைகள் இல்லாத ஒருவர் ஆன்மீக சாதகர் ஆகிறார்; அவர் எப்போது உள்ளார்ந்த மாயைகளும் கூட அற்றவராக ஆகிறாரோ, அப்போது அவரை இறைவன் என்றே அழைக்கலாம். இப்படிப் பட்ட மனிதரின் இதயமே உண்மையில் இறைவனின் சன்னிதானம்.