azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 06 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 06 Feb 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

While doing Kundalini Yoga, people practice breath control. In the breathing exercises, inhalation is described as Purakam, exhalation as Rechakam and holding the breath as Kumbhakam. These alone do not constitute the means to achieve yogic power. To breathe in all that is good is Purakam. To give up all that is bad is Rechakam. To retain in the heart what is good is Kumbhakam. Every human being must practice this divine type of yoga; in fact this must become your primary goal. Puttaparthi is a small hamlet. How has this village attained this eminent state? You can find the answer for yourself. It was not merely a great piece of good fortune or a lucky accident. It is due to the power of thought. Every sacred thought has the power to find fulfilment. Hence scriptures declared: “As you think, that you become (Yad bhavam tad bhavati)\". Develop good thoughts and naturally you will be entitled to the right of its fruits. (Divine Discourse, 23 Nov 1990)
குண்டலினி யோகா செய்யும் போது, மனிதர்கள் சுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த சுவாச முறையில், மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் என்றும்,வெளியே விடுவது ரேசகம் என்றும் மூச்சை உள்ளேயே வைத்திருப்பது கும்பகம் என்றும் அழைக்கப் படுகிறது. யோக சக்தியைப் பெறுவதற்கு இவைகள் மட்டுமே போதுமான வழிகள் அல்ல.நல்லவை அனைத்தையும் உள்ளே சுவாசிப்பது பூரகம் ஆகும்.தீயவை அனைத்தையும் வெளியே விட்டு விடுவது ரேசகம் ஆகும். நல்லவற்றை இதயத்தில் தேக்கி வைத்துக் கொள்வது கும்பகம் ஆகும்.ஒவ்வொரு மனிதரும் இந்த தெய்வீக யோகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; உண்மையில் இதுவே உங்களது முழு முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்.புட்டபர்த்தி ஒரு சிறிய குக்கிராமம். இந்த கிராமம் எப்படி இப்படிப் பட்ட பெருமை மிக்க நிலையைப் பெற்றது? நீங்களே இதற்கான விடையைக் கண்டு கொள்ளலாம்.இது, ஏதோ வெறும் மிகப் பெரிய நல்ல அதிர்ஷ்டம் மட்டுமோ அல்லது அதிர்ஷ்டவசமான விபத்தோ அல்ல. இது எண்ணங்களின் சக்தியாலேயே.ஒவ்வொரு புனிதமான எண்ணமும் அது பூரணத்துவம் பெறுவதற்கான சக்தியைக் கொண்டது. எனவே தான் சாஸ்திரங்கள், ‘’ உங்கள் எண்ணம் எப்படியோ, நீங்கள் அப்படியே ‘’ ( யத் பாவம் தத் பவதி ) என்கின்றன. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்; இயல்பாகவே அதன் பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்.