azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 30 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 30 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

You must seek Truth and test it thoroughly with all the canons of reasoning. The discipline consists of: 1) The heroism to observe dharma rigorously (Ojas). 2) Fearless self-control (Tejas). 3) Discarding of all feelings of joy or sorrow with equanimity, due to the peaks and troughs of life. 4) Having unshakable faith in dharma and truth (Sahana). 5) Mental and physical health of the most excellent kind, earned by discipline and celibacy (bala). 6) The desire and ability to speak sweetly and straight, won by the practice of truth and love. 7) Withdrawal of the five senses of wisdom (Jnanendriyas) and the five senses of action (karmendriyas) from vice and sin, and the sublimation of all the senses to serve truth (indriya-moha). 8) Victory over Self resulting in acceptance by the world. 9) The destruction of one’s prejudices and the pursuit of truth at all times (dharma). It is essential that all humanity today acknowledges the glory of this universal dharma. You must earnestly pray, “May all this be conferred on me” as found in the “Chamakam” hymn. (Dharma Vahini, Ch 13)
நீங்கள் சத்தியத்தை நாடி, அதை பகுத்தறிவின் அனைத்து நியதிகளாலும் முற்றிலும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அவையே, 1)தர்மத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதில் தீரம் ( ஓஜஸ்); 2)அச்சமேயில்லாத சுயக் கட்டுப்பாடு ( தேஜஸ்); 3) வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும், சுக , துக்கங்களை, சமச்சீராக ஏற்றுக் கொள்வதன் மூலம் நிராகரித்தல்; 4)சத்தியம் மற்றும் தர்மத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருத்தல் ( ஸஹானா); 5) கட்டுப்பாடு மற்றும் பிரம்மச்சர்யத்தால் பெறப்பட்ட மிகச் சிறந்த வகையான மன மற்றும் உடல் நலம் ( பலா); 6) தர்மத்தையும்,ப்ரேமையையும் அனுசரிப்பதால் பெற்ற, இனிமை மற்றும் நேர்மையாகப் பேசுவதற்கான ஆர்வமும், திறமையும் ; 7) களங்கம் மற்றும் பாவத்திலிருந்து ஐந்து கர்மேந்திரங்களையும், ஐந்து ஞானேந்தியங்களையும் விலக்கி,அனைத்து புலன்களையும் சத்தியத்திற்கு சேவை ஆற்றும் வண்ணம் புனிதப்படுத்துவது ( இந்திரிய-மோஹ);8)ஆத்ம ஜயம் பெறுவதன் மூலம் உலகத்தின் ஏற்புடமையை அடைதல்; 9) தனது பாரபட்சங்களை அழித்து, எல்லாக் காலங்களிலும் சத்தியத்தைப் பின்பற்றுதல் ( தர்ம). இந்த பிரபஞ்சமயமான தர்மத்தின் மஹத்துவத்தை, இன்று மனித குலம் அனைத்தும் ஏற்றுக் கொள்வது மிகவும் அத்தியாவசியமானதாகும். ‘’ சமக ‘’ வேத மந்திரங்களில் காணப்படுவதைப் போல, ‘’ இவை அனைத்தும் எனக்குக் கிடைக்கட்டும் ‘’ என நீங்கள் உளமாற பிரார்த்திக்க வேண்டும்.