azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Sometimes, when the steering of a car is turned one way, you may experience the wheels dragging the car in another way – this indicates there is a problem you must fix! When the tyres are flat with no air, they behave as if there is no relationship with the steering. But they can never go beyond the bounds of steering. The steering in the hand must be connected to the wheels below for the journey to happen, that connection is mandatory and inevitable. For the one who has struggled with and conquered their out-going senses, their internal instruments become easily controllable. The external world distracts your senses and attracts you and you succumb by becoming objects of experience. To overcome them is indeed a difficult task. But your internal instruments have no form even though they may be endowed with name; they have experienced spiritual bliss (ananda) before, so they can be tamed with greater ease. (Prema Vahini, Ch 53)
சில சமயங்களில், காரின் ஸ்டியரிங் வீலை ஒரு பக்கம் திருப்பினால், அதன் சக்கரங்கள் மற்றொரு பக்கமாக இழுத்துக் கொண்டு போவதை நீங்கள் அனுபவத்தில் கண்டிருக்கலாம் –நீங்கள் சரி செய்ய வேண்டிய ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதே இதன் பொருள்!காரின் சக்கரங்களில் காற்று இல்லாமல் போய்விட்டால், அவை, ஸ்டியரிங் வீலுடன் எந்த சம்பந்தமும் இல்லாதது போல நடந்து கொள்ளும்.ஆனால் அவை ஸ்டியரிங் வீலின் கட்டுப்பாட்டைத் தாண்டி ஒரு போதும் செல்ல மாட்டா.ஒரு பிரயாணம் நடப்பதற்கு, கையில் பிடித்திருக்கும் ஸ்டியரிங் வீல், கீழே இருக்கும் சக்க்ரங்களோடு இணைக்கப் பட்டு இருக்க வேண்டும்; அந்த இணைப்பு கட்டாயமானதும், தவிர்க்க முடியாததும் ஆகும். தங்களது வெளிப்புறமான புலன்களோடு போராடி, அவற்றை வென்ற ஒருவருக்கு, உள்ளார்ந்த உபகரணங்களை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.வெளிப்புற உலகம் உங்களது புலன்களை சலனப்படுத்தி, ஈர்த்து விடுகின்றன;அதனால் நீங்கள் அதற்கு பலியாகி, அனுபவப் பொருட்களாக ஆகி விடுகின்றீர்கள். அவற்றை வெல்வது உண்மையிலேயே கடினமான காரியம் தான். ஆனால் உங்களது உள்ளார்ந்த உபகரணங்களுக்கு நாமம் இருந்தாலும் கூட அவற்றிற்கு ரூபம் இல்லை; அவை பேரானந்தத்தை முன்னரே அனுபவித்திருப்பதால், அவற்றை மிகவும் எளிதாகக் கட்டுப் படுத்தி விடலாம்.