azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 21 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 21 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

To attain the knowledge of righteousness (dharma), first, you must receive training under wise people, who are imbued with righteousness (dharma). Next, you must aspire to purify yourself (Atma shuddhi) and practice truth (sathya). Thirdly, you must realize the value of knowledge of the scriptures (Vedas), which is the voice of God. When these three steps are completed, you will clearly understand the truth and discriminate it from untruth. This enquiry into truth must be done in amity and cooperation. Everyone is entitled to attain spiritual wisdom. Everyone must be equally eager to discover the truth and benefit from it. All opinions must be tested on the touchstone of dharma, of universal goodness (sarvaloka-hitha). The principles that pass this test alone must be chosen and practiced, and shared with the world. This will help humanity to progress. Then, everyone will develop joy and happiness in equal measure. All of you must use this method and perform noble and pure deeds consistently. (Dharma Vahini, Ch 13)
தர்மத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு முதன் முதலில் ,நீங்கள் தர்மத்தில் தோய்ந்த ஆன்றோர்களிடம் பயிற்சி பெற வேண்டும். அடுத்ததாக, நீங்கள் உங்களையே தூய்மைப் படுத்திக் கொள்ள விழைந்து ( ஆத்ம சுத்தி), சத்தியத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். மூன்றாவதாக, இறைவனின் குரலான வேதங்களைப் பற்றிய அறிவின் மதிப்பை உணர வேண்டும். இந்த மூன்று படிகளையும் பூர்த்தி செய்த பின்,சத்தியத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதை அசத்தியத்திலிருந்து பகுத்தறிந்து கொள்வீர்கள்.சத்தியத்தைப் பற்றிய இந்த ஆய்வை, நட்புணர்வு மற்றும் கூட்டுறவுடன் செய்ய வேண்டும். ஆன்மீக ஞானத்தைப் பெறுவதற்கு அனைவருக்கும் தகுதி உண்டு. ஒவ்வொருவரும் சத்தியத்தைக் கண்டு பிடித்து அதிலிருந்து பயன் பெறுவதில், சமமான ஆர்வம் காட்ட வேண்டும்.அனைத்து கருத்துக்களும், தர்மம் மற்றும் அனைத்துலக நன்மை ( ஸர்வலோக-ஹித) என்ற உரைகல்லில் பரிசோதிக்கப் பட வேண்டும்.இந்தப் பரிசோதனையில் தேறிய கோட்பாடுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவற்றை நடைமுறைப் படுத்தி, இந்த உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது மனித குலத்தின் மேம்பாட்டிற்கு உதவும். பின்னர், ஒவ்வொருவரும் சாந்தோஷ, ஆனந்தங்களை, சம அளவில் வளர்த்துக் கொள்வார்கள். நீங்கள் அனைவரும் இந்த முறையைப் பயன்படுத்தி, சீரிய மற்றும் புனிதமான செயல்களை இடையறாது ஆற்ற வேண்டும்.