azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 Dec 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 Dec 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Develop the quality of love. Do not hate anyone. Develop the faith that whatever happens to you is good for you. Think that whenever you encounter any difficulty or suffering, you alone are responsible for it. On the other hand, if you insult anyone knowingly or unknowingly, that someone else may punish you some day. Pleasure and pain are the products of your own making. The merit or sin you commit, follows you like a shadow always. Many today give sermons to others, without following their own advice. What value will your advice have? Whenever you read or listen to a noble thought, it is of no value to you, until you practice it assiduously. Help your fellow human beings at least in a small measure. You will be helped in return, when you need it most. Never blame others for the difficulties you face. Never abuse anyone. Love all and treat everyone as your brothers and sisters. (Divine Discourse Jan 01, 2004.)
அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒருவரையும் வெறுக்காதீர்கள். எது நடந்தாலும், அது உங்களது நன்மைக்கே என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்போதாவது நீங்கள் எந்த கஷ்டமோ அல்லது நஷ்டமோ எதிர் கொள்ள நேர்ந்தால், நீங்கள் மட்டுமே அதற்குப் பொறுப்பு என்று எண்ணுங்கள். அதே சமயம் நீங்கள் யாரையாவது தெரிந்தோ அல்லது தெரியாமலோ அவமதித்தால், வேறு யாராவது ஒருநாள் உங்களை தண்டிப்பார்.இன்பமும், துன்பமும், உங்களது செயல்களின் பலன்களே.நீங்கள் புரியும் புண்ணியமோ அல்லது பாவமோ உங்களை நிழல் போலத் தொடரும். தங்களது அறிவுரையைத் தாங்களே பின்பற்றாது,பலர் இன்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார்கள். உங்களது அறிவுரைக்குப் பின் என்ன மதிப்பு இருக்கும்? நீங்கள் ஒரு சீரிய எண்ணத்தைப் பற்றிப் படித்தாலோ அல்லது கேட்டாலோ, அதை அயராது நீங்கள் பின்பற்றும் வரை, அதனால் உங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.உங்களது சகமனிதர்களுக்கு ஒரு சிறிதளவேனும் உதவி செய்யுங்கள். உங்களுக்கு மிகவும் தேவைப் படும் போது, திரும்ப நீங்கள் உதவி பெறுவீர்கள்.நீங்கள் எதிர் கொள்ளும் கஷ்டங்களுக்கு பிறரை நிந்திக்காதீர்கள். எவரையும் ஏசாதீர்கள். அனைவரையும் நேசித்து, ஒவ்வொருவரையும் உங்களது சகோதர, சகோதரிகளாகக் கருதுங்கள்.