azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 26 Dec 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 26 Dec 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Look at the fish! Living as it does perpetually in water, has it rid itself of its foul smell to any extent? No. Inclinations (vasanas) won’t disappear as long as one’s heart is full of the illusion of egotism, even if one is immersed in many heart-purifying spiritual disciplines. If you really want to get rid of the feeling of “I” and “mine”, you must transform yourself and worship the Lord (Hari), without any likes and dislikes. Just as light and darkness can never coexist at the same place, love and hatred can’t coexist in the same heart. You experience joy and misery through the ear. Therefore as a spiritual aspirant, avoid the cruel arrows of hard words. Instead use sweet, pleasant and soft words suffused with truth. Speaking softly by adding falsehood will bring you misery. You can recognise a true spiritual aspirant through their good qualities. (Prema Vahini, Ch 43.)
மீனைப் பாருங்கள் ! தண்ணீரிலேயே எப்போதும் மூழ்கி இருந்தாலும் கூட, தனது துர்நாற்றத்தை கொஞ்சமாவது நீக்கிக் கொண்டிருக்கிறதா? இல்லையே! ஒருவர் இதயத்தைத் தூய்மைப் படுத்தும் பல ஆன்மீக சாதனைகளில் மூழ்கி இருந்தாலும் கூட,இதயம் முழுவதும் அஹங்காரத்தின் மாயை சூழ்ந்திருந்தால், வாஸனைகள் எனப்படும் உந்துதல்கள் மறையாது.நீங்கள் உண்மையிலேயே,‘’ நான்’’, ‘’ எனது’’ என்ற உணர்வுகளை விட்டொழிக்க விரும்பினால், உங்களை மனமாற்றம் செய்து கொண்டு, எந்த விதமான விருப்பு வெறுப்பும் இன்றி, இறைவனை வழிபட வேண்டும். எவ்வாறு ஒளியும், இருளும் ஒரே இடத்தில் இருக்க முடியாதோ, அவ்வாறே அன்பும், வெறுப்பும் ஒரே இதயத்தில் இருக்க முடியாது. நீங்கள் செவிகளின் வழியாக இன்ப , துன்பங்களை அனுபவிக்கிறீர்கள். எனவே, ஒரு ஆன்மீக சாதகராக,கடுஞ் சொற்கள் என்ற கொடூரமான அம்புகளை தவிர்த்து விடுங்கள்.அதற்கு பதிலாக, சத்தியத்தில் தோய்ந்த இனிமையான, இன்பமான, இதமான, வார்த்தைகளைப் பயன் படுத்துங்கள். பொய்மையைக கலந்து பேசப்படும் இதமான வார்த்தைகள் உங்களுக்கு துன்பத்தைக் கொண்டு வந்து விடும்.நீங்கள் ஒரு உண்மையான ஆன்மீக சாதகரை அவர்களது நல்ல குணங்களின் மூலம் இனம் கண்டு கொள்ளலாம்.