azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Dec 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Dec 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

What does it mean when you say God descends as an Avatar? God out of His love, affection and compassion, comes down to the level of a human being and arouses the Divine Consciousness in humankind. When God finds that many people are desperately searching outside of themselves for God, He makes you aware of God within yourself. God is in fact the core in everyone. This chance, to realize God within, has been granted to you as a reward for merit acquired by you in many previous lives, so as to reach the highest goal of merging with the absolute. Every bird needs two wings to fly; a cart needs two wheels to be pulled along. To journey towards the highest goal, you need both faith and steadfastness - spiritual learning (vidya) and penance (tapas). Bhagavad Gita states, Knowledge of the Self (Atma Vidya) is the holiest. Knowledge (Vidya) shows the way, and the penance (tapas) makes you reach the goal. Both are necessary to attain the Ultimate. (Divine Discourse, 24 Dec 1980.)
இறைவன் அவதாரம் எடுத்து இற(ர)ங்கி வருகிறான் என்று நீங்கள் கூறுவதன் பொருள் என்ன? தனது ப்ரேமை,பரிவு மற்றும் கருணையின் காரணமாக, இறைவன் ஒரு மனிதனின் நிலைக்கு இறங்கி வந்து, மனித குலத்தினுள் தெய்வீக உணர்வைத் தட்டி எழுப்புகிறான்.பல மனிதர்கள் தங்களுக்கு வெளியே இறைவனைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருப்பதைக் காணும் அவன், உங்களுக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர வைக்கிறான். ஒவ்வொருவரின் உட்கருவும் உண்மையில் இறைவனே. பரப்பிரம்மத்துடன் ஒன்றரக் கலப்பது என்ற தலை சிறந்த குறிக்கோளை அடைவதற்காக, உங்களுக்குள்ளேயே இறைவனை உணருவதற்கான இந்த வாய்ப்பு, நீங்கள் முந்தைய பல ஜன்மங்களில் ஈட்டிய புண்ணியத்திற்குப் பரிசாக அளிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பறவைக்கும் பறப்பதற்கு இரண்டு இறக்கைகள் தேவை; ஒரு வண்டி இழுத்துச் செல்லப் படுவதற்கு, இரண்டு சக்கிரங்கள் தேவை. தலை சிறந்த குறிக்கோளை நோக்கிப் பயணிப்பதற்கு உங்களுக்கு நம்பிக்கையும், விடாமுயற்சியும் – அதாவது ஆன்மீக ஞானம்( வித்யா ) மற்றும் தவம் ( தபஸ்)- வேண்டும்.ஸ்ரீமத் பகவத் கீதை ஆத்ம வித்யாவே அனைத்திலும் புனிதமானது எனக் கூறுகிறது. ஞானம் ( வித்யா) வழியைக் காட்டுகிறது; தவம் (தபஸ்) உங்களைக் குறிக்கோளுக்கு இட்டுச் செல்கிறது. தலை சிறந்த இறுதி இலக்கை எட்டுவதற்கு இரண்டுமே தேவை.