azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 21 Dec 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 21 Dec 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Follow at least one of the nine modes of devotion (Sravanam, kirtanam, etc.). It doesn’t matter how wealthy or learned you are; God is concerned only with the sincerity and purity of your mind and heart and the wholeheartedness and genuine nature of your love. Valmiki was a hunter. Nandanar was of a low caste. Kuchela was a poor man. Dhruva and Prahlada were five-year-old lads. Sabari was a tribal woman, illiterate and uncivilized. But all of them won God’s Grace in abundance, because of their wholehearted devotion, love and surrender. Follow Sabari’s example, who always thought of Sri Rama and His happiness, and dedicated all her thoughts, words, and deeds to Him alone, such that her every action was transformed and sublimated into the highest penance (tapas). Meditation does not mean sitting idle in a particular posture, like posing for a photograph. Like Sabari’s life, your life must become a continuous meditation wherever you are, and whatever you do.(Summer Showers 1990, Ch 16.)
நவவித பக்திகளில் (ஸ்ரவணம்,கீர்த்தனம் போன்றவை) ஏதேனும் ஒன்றையாவது கடைப்பிடியுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் அல்லது படித்தவர் என்பது ஒரு பொருட்டே அல்ல; இறைவன், உங்களது மனம் மற்றும் இதயத்தின் சிரத்தை மற்றும் தூய்மை,மேலும் இதயபூர்வமான மற்றும் உண்மையான உங்களது அன்பின் தன்மையை மட்டுமே கவனிக்கிறான். வால்மீகி ஒரு வேடனாக இருந்தவர். நந்தனார் கீழ் ஜாதியைச் சார்ந்தவர். குசேலர் ஒரு பரம ஏழை. துருவனும், ப்ரஹலாதனும் ஐந்து வயதுக் குழந்தைகள். சபரி ஒரு பழங்குடியினரைச் சார்ந்த, படிப்பறிவில்லாத, கலாசரமற்ற ஒருவர். ஆனால் இந்த அனைவரும், தங்களது இதயம் நிறைந்த பக்தி, ப்ரேமை மற்றும் சரணாகதி உணர்வின் மூலம் இறைவனது அருளை பரிபூரணமாகப் பெற்றனர். எப்போதும் ஸ்ரீராமனையும், அவனது சந்தோஷத்தையும் பற்றியே எண்ணி, தனது அனைத்து எண்ணம், சொல், மற்றும் செயல்களை அவனுக்கே அற்பணித்ததன் மூலம், தனது ஒவ்வொரு செயலையும், தலை சிறந்த தவமாக உருமாற்றி புனிதப்படுத்திய சபரியின் உதாரணத்தைக் கடைப்பிடியுங்கள். தியானம் என்றால்,ஒரு புகைப்படத்திற்கு உட்காருவது போல, ஒரு குறிப்பிட்ட நிலையில் சோம்பேறியாக உட்கார்ந்திருப்பது என்று பொருளல்ல.சபரியின் வாழ்க்கையைப் போல, நீங்கள் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும், உங்களது வாழ்க்கை ஒரு இடையறாத தியானமாக இருக்க வேண்டும்.