azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Dec 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Dec 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

In ancient times, people never gave up the practice of Dharma even when threatened with death at the point of the sword. Now without even the slightest pressure from others, people slide down and fall into unrighteousness (Adharma). Practicing Dharma is not an ordinary affair. The one who does not practice dharma is as bad as dead; one who practices it is of the divine nature. Presently there is an urgent need to turn people onto the dharmic path through the traditional methods of counselling with good advice, sharing with them the attractive consequences of following the path, threatening to dissociate from those who do not, and inflicting punishment as a last resort. You should derive the greatest possible benefit from dharma and while following it, avoid causing any injury to yourselves or others. You must spread the glory of dharma by making yourself a shining example of the peace and joy it gives. (Dharma Vahini, Ch 5)
பண்டைய காலத்தில்,கத்தி முனையில் கொன்று விடுவதாக மிரட்டப்பட்டாலும் கூட, மனிதர்கள் தர்மத்தைக் கடைப்பிடிப்பதை கை விட்டதில்லை. இப்போதோ,பிறரிடமிருந்து ஒரு இம்மி அளவு திணிப்பு இல்லாமல் இருந்தாலும் கூட, மனிதர்கள் அதர்மத்தில் வழுக்கி விழுந்து விடுகிறார்கள்.தர்மத்தைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு சாதாரண காரியம் அல்ல.தர்மத்தைக் கடைப்பிடிக்காத ஒருவன் சவத்திற்கு சமமானவனே; அதைக் கடைப்பிடிப்பவன் தெய்வீக இயல்புடயவன். தற்போது,பரம்பரை முறையான நல் ஆலோசனை தருவது,தர்மத்தைக் கடைப்பிடிப்பதால் வரும் நல்ல விளைவுகளைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது, அவ்வாறு கடைப் பிடிக்காதவர்களை பகிஷ்கரிப்போம் என அச்சுறுத்துவது, கடைசி முறையாக தண்டனை அளிப்பது போன்றவற்றின் மூலம் மனிதர்களை தார்மீக வழியில் திருப்ப வேண்டியது ஒரு அவசர அவசியமாகிறது. தர்மத்தின் மூலம் நீங்கள் மிக உயர்ந்த பலனைப் பெறவும் வேண்டும்;அதைக் கடைப்பிடிக்கும் போது உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு ஏற்படாமல் தவிர்க்கவும் வேண்டும்.அது தரும் சாந்தி , சந்தோஷங்களின் ஒளி விடும் ஒரு உதாரணமாக நீங்களே திகழுவதன் மூலம், நீங்கள் தர்மத்தின் மகத்துவத்தைப் பரப்ப வேண்டும்.