azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 30 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 30 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

When you desire to transform a silver statue into a Krishna idol, you cannot succeed by simply covering the silver idol with a cloth and uncovering it after a few seconds! You have to break the statue into pieces, melt the bits and pour the silver into the Krishna mould! So too when you yearn to transform yourself into Divine, you must break the pieces with the help of the attitude of detachment, melt them in the fire of wisdom (jnana), and pour your mind into the mould of devotion. Then the entire consciousness takes on the Divine Name, Form and Substance. Then, whatever is spoken or done or thought assumes the splendour and purity of the Divine. Remember, nothing will please God more than rigorous adherence to righteousness (Dharma). You can stick to the path of Dharma only if you are conscious of the Divine in everything that you see or hear, touch or taste. [Divine Discourse, Nov 1970]
நீங்கள் ஒரு வெள்ளிச் சிலையை, ஸ்ரீகிருஷ்ணரது விக்ரஹமாக மாற்ற விரும்பினால்,அந்த வெள்ளிச் சிலையை ஒரு துணியால் மூடிவிட்டு, சில நொடிகளுக்குப் பிறகு அதை வெறுமனே எடுத்து விட்டால் மட்டும், நீங்கள் வெற்றி அடைய முடியாது.அந்தச் சிலையை துண்டு துண்டாக உடைத்து, அவற்றை உருக்கி, அந்த வெள்ளியை ஸ்ரீகிருஷ்ணரது உருவ அச்சில் வார்க்க வேண்டும் ! அதைப் போலவே, நீங்களும் தெய்வீகமானவர்களாக மாற விழைந்தீர்களானால், பற்றின்மை என்ற மனப்பாங்கினால்,துண்டுகளாக உடைத்து, ஞானம் எனும் நெருப்பில் அவற்றை உருக்கி,உங்களது மனதை பக்தி எனும் அச்சில் வார்க்க வேண்டும். பின்னர் அந்தராத்மா முழுமையாக தெய்வீக நாம,ரூப,ரசத்தை ஏற்றுக் கொள்கிறது.பின்னர், எதைப் பேசினாலும் அல்லது செய்தாலும்,அல்லது நினைத்தாலும், அது தெய்வீகத்தின் பரிசுத்தம் மற்றும் காந்தியைப் பெற்று விடுகிறது.தர்மத்தை அயராது பற்றி ஒழுகுவதை விட, இறைவனைத் திருப்திப்படுத்துவது வேறு எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.நீங்கள் காணும்,கேட்கும்,தொடும் அல்லது சுவைக்கும் ஒவ்வொன்றிலும் நீங்கள் தெய்வீகத்தை உணர்ந்தால் மட்டுமே, நீங்கள் தர்மத்தின் பாதையில் பற்றி இருக்க முடியும்.