azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Putlibai, Mahatma Gandhi’s mother, spent her life in the contemplation of God. She observed a vow wherein she wouldn’t partake food until she heard a cuckoo sing. One day it so happened that the cuckoo was not heard. Gandhi, a small boy then, couldn’t bear to see his mother fasting for a long time. He went behind the house and mimicked the cuckoo’s song. Putlibai felt extremely sad when she realised that her son was uttering a lie. She cried, “O God! What sin have I committed to have given birth to a son who speaks untruth?” Realising the immense grief he had caused to his mother by uttering a lie, Gandhi took a vow that he would never indulge in falsehood ever again. It is imperative that mothers train their children in moral values right from their childhood. Never overlook children’s mistakes – correct them immediately when they stray away from the righteous path and reward them for their good deeds. (Divine Discourse Nov 19, 2000.)
மஹாத்மா காந்தியின் தாயான புத்லி பாய் அம்மையார் தனது வாழ்க்கையை இறைச் சிந்தனையிலேயே கழித்தவர்.அவர், ஒரு குயில் ஒன்று பாடுவதைக் கேட்காமல் , உணவு உட்கொள்வது இல்லை என்ற ஒரு ஸங்கல்பம் செய்திருந்தார். ஒருநாள் இந்தக் குயலின் குரல் கேட்க முடியாமல் போய்விட்டது. சிறுவனாக அப்போது இருந்த காந்தியால், தனது தாயார் வெகு நேரம் பட்டினி கிடைப்பதைப் பார்க்கச் சகித்துக் கொள்ள முடியவில்லை.அவர் வீட்டின் பின்புறம் சென்று குயிலைப் போலக் குரல் எழுப்பினார்.தனது மகன் ஒரு பொய்யைச் சொல்லி விட்டான் என்பதை உணர்ந்த போது,புத்லி பாய் அம்மையார் மிகவும் துயரம் அடைந்தார்.அவர், ' ஹே பகவான் ! பொய்யைப் பேசும் ஒரு மகனைப் பெறுவதற்கு நான் என்ன பாவம் செய்தேன்?'' என அழத் தொடங்கினார்.ஒரு பொய்யைப் பேசியதன் மூலம் தனது தாய்க்கு தான் ஏற்படுத்திய அளவற்ற துக்கத்தைக் கண்ட காந்தி,அன்றிலிருந்து ஒரு போதும் பொய்மையில் ஈடுபட மாட்டேன் என உறுதி பூண்டார்.தங்களது குழந்தைகளை, தாய்மார்கள், இளம் பிராயத்திலிருந்தே நல்லொழுக்க நெறிகளில் பயிலுவிப்பது அத்தியாவசியமானதாகும். ஒரு போதும் குழந்தைகளது தவறுகளை கவனிக்காது விடாதீர்கள்- அவர்கள் தார்மீகப் பாதையிலிருந்து விலகும் போது,அவர்களை உடனுக்குடனேயே திருத்தி, அவர்கள் ஆற்றும் நற்செயல்களுக்கு பரிசுகள் வழங்குங்கள்.