azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Without the control of senses, spiritual practices (Sadhana) are ineffective; it is like keeping water in a leaky pot. Pathanjali (the celebrated sage and author of the Yoga Sutras) has said that when tongue is conquered, victory is yours. While the eye, the ear and the nose serve as instruments of knowledge about one particular characteristic of Nature, the tongue makes itself available for two purposes: to judge taste and to utter words - symbols of communication. You must control the tongue with double care, since it can harm you in two ways. When the tongue craves for some delicacy, assert that you will not cater to its whims. If you persist in giving yourself simple food that is not savoury or hot, but amply sustaining, the tongue may squirm for a few days, but it will soon welcome it. That is the way to subdue it and overcome the evil consequences of it being your master. (Divine Discourse, 23-Nov-1968)
புலனடக்கம் இன்றி, ஆன்மீக சாதனைகள் பயனற்றவை;அது ஒழுகும் பானையில் நீரை வைப்பது போலாகும்.யோக சாஸ்திரத்தின் ஆசிரியரான புகழ் பெற்ற பதஞ்சலி முனிவர், நாவை வென்று விட்டால், வெற்றி உங்களுடையதே என்கிறார்.கண், காது மூக்கு ஆகியவை இயற்கையின் ஒரு குணாதிசியத்தை அறிவதற்கான கருவிகளாக இருக்கும் போது, நாக்கு மட்டும் இரண்டு விதமாக அதாவது சுவையை உணர்த்துவதற்கும், தகவல் தொடர்பின் சின்னங்களான வார்த்தைகளைப் பேசுவதற்கும் பயன்படுகிறது. அது உங்களுக்கு இரண்டு விதமாக தீமை அளிக்க வல்லதால்,நீங்கள் நாவை இரட்டிப்பு கவனத்துடன் கட்டுப் படுத்த வேண்டும்.எப்போது நாவு சுவையான ஒரு பதார்த்தத்திற்கு ஆசைப் படுகிறதோ, அப்போது அதனது எண்ணங்களுக்கு இடம் கொடுக்க மாட்டேன் என நீங்கள் உறுதியாக இருங்கள். அதிகமான உப்போ அல்லது காரமோ அற்ற, ஆனால் அதிக ஊட்டமான, எளிதான உணவை விடாமல் நீங்கள் கொடுத்துக் கொண்டே வந்தீர்களானால், நாக்கு சில நாட்களுக்கு நெளியும், ஆனால் சீக்கிரத்தில் அதையே வரவேற்கத் தொடங்கும்.அதை அடக்குவதற்கும், அது உங்களது எஜமானனாக இருப்பதால் வரும் தீய விளைவுகளை வெல்வதற்கும், அதுவே வழி.