azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

My dear students, the culture of Bharat is sublime, splendorous, sacred, and divine. It can fulfill all your high desires and quench your deepest thirst. First translate this awareness into actual practice and enshrine the experience in your hearts. Then share the joy of that experience with others. Never allow your minds to get agitated with limitless desires. You must render your homes bright by pleasing your parents. If you cause grief to them your entire life will be soaked in grief and your children, in turn, are sure to sink you in sorrow. Never be arrogant towards your parents just because you earned a degree. "Consider the Mother as God; consider the Father as God; consider the Teacher as God; consider the Guest as God." Follow this fourfold exhortation with full faith in its validity, derive bliss (Ananda) therefrom and inspire others by your example, so that the Motherland may progress and prosper. Fulfil this desire of Mine, with My blessings. (Divine Discourse, 22-11-1986)
என் அருமை மாணவர்களே, பாரத கலாசாரம் கம்பீரமானது, ஒளிமயமானது, புனிதமானது மேலும் தெய்வீகமானதாகும்.அது உங்களது அனைத்து உயர்ந்த ஆசைகளையும் பூர்த்தி செய்ய வல்லது; உங்களது மிக ஆழ்ந்த தாகங்களைத் தணிக்க வல்லது.முதலில் இந்த விழிப்புணர்வை நடைமுறையில் கொண்டு வந்து, அந்த அனுபவத்தை உங்கள் இதயத்தில் கொலு வீற்றிருக்கச் செய்யுங்கள். பின்னர் அந்த அனுபவத்தின் ஆனந்தத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு போதும் ,வரையற்ற ஆசைகளால் உங்கள் மனங்களை குழப்பமடைய விடாதீர்கள்.உங்களது பெற்றோர்களைத் திருப்தி அடையச் செய்வதன் மூலம் உங்கள் இல்லங்களை, நீங்கள் பிரகாசமாக்க வேண்டும். நீங்கள் அவர்களை துன்பப் படுத்தினால்,உங்கள் வாழ்வனைத்தும் துன்பத்தில் ஆழ்ந்து விடும்; உங்களது குழந்தைகள் கண்டிப்பாக உங்களை துயரத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.ஏதோ ஒரு பட்டம் பெற்று விட்டோம் என்பதால், ஒரு போதும் அவர்களிடம் ஆணவமாக நடத்து கொள்ளாதீர்கள். '' தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள்; தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள்; குருவைத் தெய்வமாகப் போற்றுங்கள்; விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள் ''.இந்த நான்கு விதமான அறிவுரைகளின் நிச்சயத் தன்மையில் முழு நம்பிக்கை வைத்து, அவற்றைக் கடைப் படித்து, ஆனந்தத்தைப் பெற்று, மற்றவர்களையும் உங்களது உதாரணத்தால் ஊக்குவித்து, தாய் நாடு முன்னேற்றமும்,வளமும் பெறுமாறு செய்யுங்கள். என்னுடைய ஆசிகளுடன், எனது இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.