azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 29 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 29 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Have high aims in life. Set before yourselves the examples of great men and women who have figured in the history of our country and the world. Take a lesson from their life of sacrifice and heroism. You need determination to face the challenges of life which is filled with ups and downs, successes and failures, and joys and sorrows. These challenges have to be faced with faith in God. The mind should not be allowed to waver and hop from one thing to the other. A steady mind is the mark of a truly educated person. Life should be governed by definite regulations. Self-control is essential for leading a righteous life. Our culture has always laid stress on the well-being of all. You should not be overwhelmed by difficulties that you may encounter in life. They are all transient; they come and go. The source of enduring bliss is within you. Do not give way to weakness of will. (Divine Discourse, Jan 21, 1988.)
வாழ்வில் உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டிருங்கள்.நமது தேசம், மற்றும் உலகின் சரித்திரத்தில் இடம் பிடித்த தலைசிறந்த ஆண்கள் மற்றும் பெண்களின் உதாரணங்களை உங்கள் முன் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களது தியாகம் மற்றும் வீரம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.உயர்வு-தாழ்வு,வெற்றி-தோல்வி,இன்பம்-துன்பம் ஆகியவற்றால் நிரம்பியிருக்கும் வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்ள உங்களுக்கு மன உறுதி வேண்டும்.இந்த சவால்களை, இறைவன் பால் கொண்ட நம்பிக்கையுடன் எதிர் கொள்ள வேண்டும். மனம் ஊசலாடிக் கொண்டே ஒன்றிலிருந்து , மற்றொன்றிக்கு தாவிக் கொண்டே இருப்பதை அனுமதிக்கக் கூடாது. நிலையான மனமே, ஒரு உண்மையிலேயே கல்வி கற்றவனின் அடையாளம். வாழ்க்கையை திட்ட வட்டமான விதிமுறைகளால் நிர்வகிக்க வேண்டும். தார்மீகமான வாழ்க்கை வாழ்வதற்கு சுயக் கட்டுப்பாடு அத்தியாவசியமானது. நமது கலாசாரம் அனைவரது நலனையே எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. நீங்கள் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் துன்பங்களால் சோர்ந்து விடக் கூடாது. அவை தாற்காலிகமானவை, அவை வரும்,போகும்.நிரந்தரமான ஆனந்தத்தின் ஊற்று உங்களுள்ளேயே உள்ளது. மனத் தளர்ச்சிக்கு இடமே அளிக்காதீர்கள்.