azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Oblivious to the presence of the sacred Divine within, people embark on their quest for God. Avatars (incarnations) are of two kinds: Amsaavatar and Purnaavatar. All human beings are Amsaavatar (partial incarnation of the Divine). Mamaivaamso jeevaloke jeevabhutah sanatanah (In this world of living beings, it is a part of My Eternal Self that has become the Jiva, the individual soul), says Krishna in the Gita. These partial incarnations, caught up in Maya, develop egoism and possessiveness and lead worldly lives. However, the Purnaavatars (complete incarnations of the Divine), subduing and transcending Maya, manifest their full divinity to the world in their lives. The Purnaavatar may behave, according to the circumstances, as if subject to Maya, but in reality He is free from it at all times. But some, not understanding this truth owing to their own limitations, attribute wrong motives to His actions. In this they reflect their own feelings. (Aug 14,1990)
தங்களுக்குள்ளேயே புனிதமான தெய்வீகம் உறைவதை அறியாத மக்கள், இறைவனைத் தேடுவதில் ஈடுபடுகிறார்கள்.அவதாரங்கள் இரு வகைப்படும். அம்ஸாவதாரம் மற்றும் பூர்ணாவதாரம். அனைத்து மனிதர்களும் அம்ஸாவதாரங்களே (தெய்வீகத்தின் ஒரு பகுதியைக் கொண்ட அவதாரங்கள்). '' மமைவாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத ஸனாதன:'' (ஜீவராசிகள் வாழும் இவ்வுலகில், பரமாத்மாவான என்னுடைய ஒரு அங்கமே ஜீவாத்மாவாக ஆகியுள்ளது) என்கிறார் ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.ஒரு அங்கமான இந்த அவதாரங்கள்,மாயையில் கட்டுண்டு, அஹங்கார, ( நான்) மமகாரங்களை (எனது) வளர்த்துக் கொண்டு, உலகியலான வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆனால், பூர்ணாவதாரங்கள் (முழுமையான தெய்வீக அம்சங்களைக் கொண்ட அவதாரங்கள்), மாயையை வென்றும் அதற்கு அப்பாற்பட்டும், தங்களது வாழ்க்கையில் அவர்களது முழு தெய்வீகத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். பூர்ணாவதாரம்,சந்தர்ப்பங்களைப் பொறுத்து, மாயைக்குக் கட்டுண்டது போல நடந்து கொள்ளக் கூடும்;ஆனால் உண்மையில் அவர் எல்லாக் காலங்களிலும் அதிலிருந்து விடுபட்டவரே. ஆனால், சிலர், தங்களது குறைபாடுகளின் காரணமாக இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல், அவரது செயல்களுக்கு, தவறான உள்நோக்கங்களைக் கற்பிக்கிறார்கள். இதில் அவர்கள் தங்களது சொந்த உணர்வுகளையே பிரதிபலிக்கிறார்கள்.