azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Jnana Yajna is specially recommended by scriptures for all. Jnana does not simply mean knowledge gained from scholars and books, but actually conducting in accordance with that knowledge. Knowledge can never ripen into wisdom so long as the ego persists in craving for results to satisfy its desires. When ego fades away, knowledge shines as Wisdom. When yajnas are performed solely for the peace and prosperity of the world (Loka-Kalyan), they reach God. Jnana reveals that in every sacrifice, God is the Prompter, the Promoter, the Sacrificer, the Sacrifice, the Product achieved and the Recipient of the product. God is the consumer of every sacred offering (Yajnabhuk); He is guardian of the yajna (Yajna-bhrith) and its performer (Yajna krith). He is all; it is only when He is all that the act becomes a genuine yajna. If this attitude can soak into every activity, it will sanctify every moment of your life and make it a yajna. (Divine Discourse, 2 Oct 1981)
ஞான யக்ஞம் அனைவருக்கும், ப்ரத்யேகமாக சாஸ்திரங்களால் அறிவுறுத்தப் பட்டுள்ளது.ஞானம் என்றால், புத்தகங்கள் மட்டும் பண்டிதர்களிடமிருந்து பெற்ற அறிவு என்று மட்டும் பொருளல்ல; ஆனால், அந்த அறிவின் படி உண்மையிலேயே நடந்து கொள்வது ஆகும்.அஹங்காரம் தனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான பலன்களுக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் வரை , அறிவு, ஞானமாக ஒரு போதும் முதிர்ச்சி அடைய முடியாது. அஹங்காரம் மறையும் போது, அறிவு, ஞானமாகப் பிரகாசிக்கிறது.எப்போது உலக அமைதி மற்றும் வளமைக்காக( லோக -கல்யாண்) மட்டுமே யாகங்கள் செய்யப் படுகின்றனவோ, அவை இறைவனை சென்றடைகின்றன.ஒவ்வொரு யாகத்திலும் உந்துபவர்,வளர்ப்பவர், யாகம் செய்பவர், யாகத்தில் இடப்படுபவை, அதிலிருந்து பெறப்படும் பலன் மற்றும் அந்தப் பலனை அடைபவர் என்ற எல்லாமே இறைவன் தான் என ஞானம் வெளிப்படுத்துகிறது.யக்ஞத்தில் இடப்படும் ஒவ்வொரு புனிதமான பொருளையும் ( யக்ஞபுக் ) ஏற்றுக் கொள்பவர் இறைவனே; யக்ஞத்தைக் காப்பவரும் ( யக்ஞ-ப்ருத்); யக்ஞத்தை நடத்துபவரும்( யக்ஞ-க்ருத்) அவரே. அனைத்தும் அவரே. அனைத்தும் இறைவனாக இருந்தால் மட்டுமே அந்த கர்மா ஒரு உண்மையான யக்ஞமாகிறது.ஒவ்வொரு செயலும் இந்த மனப்பாங்கில் திளைத்திருக்குமானால்,அது உங்களது வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் புனிதமாக்கி, அதை ஒரு யக்ஞமாகவே ஆக்கி விடும்.