azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 14 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 14 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Dharma is the moral path, which is the light; the light is bliss (ananda). Scriptures convey that Dharma is the essence of spiritual wisdom (jnana). Dharma is characterized by sacredness, peace, truth, and fortitude. Dharma is yoga (union); it is truth (sathya). Its attributes are justice, sense control, sense of honour, love, dignity, goodness, meditation, sympathy, and nonviolence. It leads you onto universal love and unity. It is the highest discipline and the most profitable. All this ‘unfoldment’ began with Dharma; this is stabilized by truth (sathya). Truth is inseparable from dharma. Truth is the law of the universe, which makes the sun and moon revolve in their orbits. Dharma is the course, the path, the law. Wherever there is adherence to morality, there you can see the law of Truth (sathya-dharma) in action. In the Bhagavata too, it is said, “Where there is Dharma, there is Krishna; where there are both Dharma and Krishna, there is victory.” (Dharma Vahini, Ch 3)
தர்மமே நல்லொழுக்கப் பாதை, அதுவே ஜோதி, அந்த ஜோதியே ஆனந்தம். சாஸ்திரங்கள் தர்மமே, ஞானத்தின் சாரம் என்று கூறுகின்றன. புனிதத்துவம்,சாந்தி, சத்யம் மற்றும் மனோவலிமை ஆகியவை ,தர்மத்தின் இயல்புகளாகும்.தர்மமே யோகம், அதுவே சத்யம்.நீதி, புலனடக்கம்,கௌரவம், அன்பு,கண்ணியம்,நற்குணம்,தியானம்,பரிவு மற்றும் அஹிம்ஸை ஆகியவை அதன் குணாதியிசங்களாகும்.அது உங்களை உலகளாவிய அன்பு மற்றும் ஒற்றுமைக்கு இட்டுச் செல்கின்றது.அதுவே மிகச் சிறந்த கட்டுப்பாடும்,அதிக அளவு நன்மை பயப்பதும் ஆகும்.படைப்பின் பரிமளிப்பு அனைத்தும் தர்மத்திலிருந்தே தொடங்கியது; அது சத்யத்தினாலேயே நிலை கொண்டது. சத்யம் தர்மத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும்.சூரியன் மற்றும் சந்திரனை தங்களது சுற்றுப் பாதையில் சுழலவைக்கும் சத்யமே, இந்தப் பிரபஞ்சத்தின் விதி முறையாகும்.தர்மமே வழி,பாதை மற்றும் சட்டமாகும். எங்கு நல்லொழுக்கம் கடைப்பிடிக்கப் படுகின்றதோ, அங்கு சத்யமும்,தர்மமும் இயங்குவதை நீங்கள் காண முடியும்.ஸ்ரீமத் பாகவதத்தில் கூட,'' எங்கு தர்மம் இருக்கிறதோ , அங்கு ஸ்ரீகிருஷ்ணர் இருப்பார்; எங்கு தர்மம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் என்ற இருவரும் இருக்கிறார்களோ,அங்கு வெற்றி நிச்சயம்.'' என்று கூறப்படுள்ளது.