azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 12 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 12 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The same person is king to his subjects, son to his parents, enemy to his enemies, husband to his wife, and father to his son. He plays many roles. Yet, if you ask him who he is, he would be wrong if he gave any of these relationships as his distinctive mark, for these marks pertain to physical relationship or activities. They denote physical kinships or professional relationships; they are names attached to temporary statuses. Nor can he reply that he is the head, the feet, the hands, etc., for they are but the limbs of the physical form. He is more real than all the limbs, and is infact beyond all names and forms which are falsities that hide the basic Brahman; he is known as ‘I’. Reflect over that entity well and discover who that ‘I’ really is. When it is so hard to analyse and understand your own entity, how can you pronounce judgement on other entities with any definiteness? (Dharma Vahini, Ch 3)
ஒரே மனிதன்,அவனது குடிமக்களுக்கு அரசனாகவும்,தனது பெற்றோர்களுக்கு மைந்தனாகவும்,அவனது எதிரிகளுக்கு எதிரியாகவும், தனது மனைவிக்குக் கணவனாகவும், தனது மைந்தனுக்குத் தந்தையாகவும் இருக்கிறான். அவன் பல பாத்திரங்களை ஏற்று நடிக்கிறான்.இருந்த போதும், நீங்கள் அவனை யார் என்று கேட்கும் போது,அவன் இதில் எந்த உறவையாவது தனது தனிப்பட்ட அம்சமாகக் கூறினால், அது தவறாகவே இருக்கும்: ஏனெனில், இவை பௌதீகமான உறவுகள் அல்லது செயல்களைச் சார்ந்தவை. அவை உடலியலான அல்லது தொழில் ரீதியான உறவுகளைக் குறிக்கின்றன;அவை தாற்காலிகமான பதவிகளைக் குறிக்கும் பெயர்களாகும்.அவன், தான், தலை,கால்,கைகள் என்றும் பதிலளிக்க முடியாது ஏனென்றால், அவை அவனது பௌதீக உருவத்தின் அங்கங்களே அன்றி வேறில்லை.அவன் அனைத்து அங்கங்களையும் விட மெய்யானவன்; உண்மையில், அவன், அடிப்படை பரப்பிரம்மத்தை மறைக்கும் பொய்மைகளான அனைத்து நாம, ரூபங்களுக்கும் அப்பாற் பட்டவன். அவனே, '' நான் '' எனப்படுபவன். இந்த அம்சத்தை நன்கு சிந்தித்து அந்த '' நான்'' என்பவன் உண்மையில் யார் என்று கண்டு பிடியுங்கள். உங்களைப் பற்றி ஆராய்ந்து, புரிந்து கொள்வதே இவ்வளவு கடினமாக இருக்கும் போது,மற்றவர்களைப் பற்றி,நீங்கள் எவ்வாறு உறுதியாகத் தீர்ப்புக் கூற முடியும்?