azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 11 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 11 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

One important verse in the Gita (Ch 12 Verse 20) states: Those who revere the dharmic way to immortality, and completely engage themselves making Me as their ultimate goal with all faith, are exceedingly dear to Me. What a grand idea this verse conveys! The Lord has clearly declared therein that those who have these qualities, that is, those who trust Him as the only ultimate goal and are attached to Him single-mindedly — they are dearest and nearest to Him. Note the expression, ‘righteous way to immortality’ (dharmya-amritham) used here. Ponder over it and draw inspiration from it. The nectar of the Lord’s grace is deserved only by those who adhere to the Lord’s dharma. Simple folks believe they have devotion toward the Lord, but they do not pause to inquire whether the Lord has love towards them. People who pine to discover the Lord’s love are rather rare. That is really the true measure of spiritual success. (Dharma Vahini, Ch 3)
ஸ்ரீமத் பகவத்கீதையில் ஒரு முக்கிய ஸ்லோகம் (அத்யாயம் 12, ஸ்லோகம் 20) கூறுகிறது: அமரத்துவத்தை அடைவதற்கான தார்மீக வழியைப் போற்றி, அனைத்து நம்பிக்கையுடனும், என்னையே அவர்களது இறுதி இலக்காகக் கொண்டு முழுமையாக ஈடுபடுபவர்கள் எனக்கு அளவுக்கு அதிகமாக பிரியமானவர்கள். இந்த ஸ்லோகம் தெரிவிக்கும் ஒரு கருத்து தான் எவ்வளவு மகத்தானது ! பகவான், இதில் தெள்ளத் தெளிவாக,யாரிடம் இந்த குணங்கள் உள்ளனவோ- அதாவது யார்,பகவான் மட்டுமே இறுதிக் குறிக்கோள் என்பதில் நம்பிக்கை கொண்டு, ஒருமித்த மனதுடன், அவர் மீதே பற்று வைத்து இருக்கிறார்களோ- அவர்களே அவருக்கு மிகவும் பிரியமானவர்களும், நெருக்கமானவர்களும் ஆவார்கள் என அறிவிக்கிறார். இங்கு பயன்படுத்தப் பட்டுள்ள '' அமரத்துவத்தை அடைவதற்கான தார்மீக வழி (தர்ம்ய-அம்ருதம்)'' என்ற பதத்தைக் கவனியுங்கள்.அதைப் பற்றிச் சிந்தித்து, அதிலிருந்து உத்வேகம் பெறுங்கள். எவர் ஒருவர் இறைவனது தர்மத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே இறைவனது அருளமுதத்திற்குத் தகுதியானவர்கள்.சாதாரண மனிதர்கள் தங்களுக்கு இறைவன் பால் பக்தி உள்ளது என நம்புகிறார்கள்; ஆனால் இறைவன் அவர்கள் பால் அன்பு கொண்டுள்ளானா என்பதைப் பற்றி அவர்கள் ஆராய்வதே இல்லை. இறைவனது அன்பைக் கண்டறிவதற்கு ஏங்கும் மனிதர்கள், அரிதானவர்களே. அது தான் ஆன்மீக வெற்றியின் உண்மையான அளவு கோலாகும்.