azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 10 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 10 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

How amazing is this! You can get sacrifices of the highest order performed by yourself or through scholars versed in Vedic ritual. You can visit and praise the holiness of diverse shrines and inspire others to journey thereto. Similarly you can master the highest scriptures and teach them to many and make them experts. But how many of you have succeeded in mastering your own bodies, senses and wayward minds, and turned them inward to gain perpetual and unchanging equanimity? You embark upon an undertaking with a purpose, goal, or an end in view. But the endeavour is sublimated into a yajna (sacrificial rite) only if the purpose, goal or end is the glorification of God. God is the yajna, for He is the Goal. His grace is the reward. His creation is used to propitiate Him; He is the performer as well as the receiver. Every act, where the ego of the doer does not surface, becomes a Divine offering. (Divine Discourse, 2 Oct 1981)
எவ்வளவு விந்தைக்குரிய விஷயம் இது!மிக உயர்ந்த யாகங்களை நீங்களேயோ அல்லது வேத சடங்குகளில் திறன் கொண்ட பண்டிதர்களை வைத்தோ, நீங்கள் செய்யக் கூடும்.பலதரப்பட்ட புண்ய க்ஷேத்ரங்களின் புனிதத்துவத்தைப் போற்றி அவற்றை நீங்களே தரிசிப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் அவற்றை தரிசிப்பதற்கு ஊக்குவிக்கக் கூடும். அதைப் போலவே, தலை சிறந்த சாஸ்திரங்களை நீங்களே கற்றுத் தேர்ந்து, அவற்றை பிறருக்குக் கற்பித்து அவர்களையும் பண்டிதர்களாக ஆக்கக் கூடும். ஆனால் உங்களில் எவ்வளவு பேர் உங்களது உடல்கள்,புலன்கள் மற்றும் அலைபாயும் மனங்களை வென்று அவற்றை, நிரந்தரமான மற்றும் மாறாத சமச்சீரான மனப்பாங்கினைப் பெறும் பொருட்டு உள்நோக்கித் திருப்பியுள்ளீர்கள்?நீங்கள் ஒரு வேலையை ஆரம்பிக்கும் போது, ஒரு குறிக்கோள் அல்லது ஒரு முடிவு அல்லது ஒரு இலக்கை நோக்கி ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் அந்த முயற்சி இறைவனைப் போற்றுவதையே அதன் குறிக்கோள் அல்லது இலக்கு அல்லது முடிவாகக் கொண்டிருந்தால் மட்டுமே , ஒரு யக்ஞமாக மாறுகிறது. இறைவனே யக்ஞம் ஏனெனில் அவனே அதன் குறிக்கோள்; அவனது அருளே அதன் பரிசு.அவனது சிருஷ்ட்டியே அவனைப் போற்றுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது; நடத்துபவனும் அவனே, பெறுபவனும் அவனே. செய்பவரின் அஹங்காரம் மேல் நோக்கி வராத ஒவ்வொரு செயலும் தெய்வீக அர்ப்பணிப்பாகி விடுகிறது.