azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Some clever people might have this doubt and raise a question: “Can we kill and injure in the name of the Lord, dedicating the act to Him?” Well, how can a person get the attitude of dedicating all activities to the Lord without at the same time being pure in thought, word, and deed? Love, equanimity, rectitude, nonviolence —these are the attendant virtues of the servant of the Lord. How can cruelty and callousness coexist with these virtues? To have selflessness, the spirit of self-sacrifice, and the spiritual eminence required for the dedicatory outlook, one must have first won the four characteristics of truth, peace, love and nonviolence (sathya, santhi, prema, ahimsa). Devoid of these four virtues no one can make any deed a worthy offering at His Feet. [Dharma Vahini, Ch 3]
சில அதி புத்திசாலியான மனிதர்கள் இப்படிப் பட்ட சந்தேகத்துடன், '' நாங்கள் இறைவனுக்கு அர்ப்பணமாக, அவன் பெயரால் கொலையும், தீங்கையும் செய்யலாமா?'' என்று கேட்கக் கூடும்.எண்ணம், சொல் மற்றும் செயலில் தூய்மை இல்லாமல் எவ்வாறு ஒரு மனிதர் அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் மனப்பாங்கைப் பெற முடியும்? அன்பு, சமச்சீரான மனநிலை,நேர்மை, அஹிம்ஸை - இவையே இறைவனது சேவகனின் இயல்பான நல்லொழுக்கங்களாகும். கொடூரமும், இரக்கமின்மையும், இந்த நல்லொழுக்கங்களோடு எவ்வாறு சேர்ந்து இருக்க முடியும்? அர்ப்பணிப்புக் கண்ணோட்டத்திற்குத் தேவையான தன்னலமின்மை, சுய தியாக உணர்வு மற்றும் ஆன்மீக மாண்பு ஆகியவற்றைப் பெற ஒருவர், சத்யம்,சாந்தி ,ப்ரேமை மற்றும் அஹிம்ஸை என்ற நான்கு குணாதிசியங்களை முதலில் வென்றிருக்க வேண்டும்.இந்த நற்குணங்கள் இன்றி எவரும் இறைவனது பாத கமலங்களில் அர்ப்பணிப்பதற்குத் தகுதியான எந்த ஒரு செயலையும் ஆற்ற முடியாது.